கெஹலிய : விழித்தெழுந்தது வயதான சிங்கம்..?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையை செயற்படுத்துவதாக பேரவையில் உறுதியளித்துவிட்டு தற்போது அது அரசியலமைப்புக்கு முரண் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதனால் அரசியலமைப்புக்கு எதிரான பிரேரணையை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts