புதையல் பொருட்களுடன் வவுனியாவில் நால்வர் கைது

வவுனியா, வடக்கு மருதோடை கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரமோட்டைக் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் பொருட்ளையும் கைப்பற்றியுள்ளனர்.

புதையல் பொருட்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற குறித்த 4 பேரையும் புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு பழைய காலத்துப் புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு, மலையாள மாந்திரிகப் புத்தகங்கள் உள்ளிட்ட புதையல் பொருட்களுடன் பெக்கோ இயந்திரத்தையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் விசாணை செய்தபோது, காஞ்சிராமோட்டைக் காட்டுப்பகுதியில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி புதையல் தோண்டியமை தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி ஆகிய பகுதிளைச் சேர்ந்த 35, 40, 42 வயதுளையடைய 4 சந்தேக நபர்ளைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, புதையல் பொருட்களை தொல்பொருள் திணைக்களகத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று குறித்த 4 ​ ​பேரையும் கைசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts