பிரிட்டனில் இலட்சக்கணக்கானவர் வீதியில் இறங்கி ஆர்பாட்டம்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தவறு, தொடர்ந்து அதிலேயே இருக்க வேண்டுமென இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டம் செய்துள்ளார்கள். புற் இற் ரு த பீப்பிள் என்ற மக்கள் அமைப்பு இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தது. ஆர்பாட்டமானது பிரிட்டன் பாராளுமன்ற முன்றல் வரை சென்றது. இந்த ஊர்வலத்தில் லண்டன் மேயர் சாடிக்கானும் பங்கேற்றிருந்தார். இவர் பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்டவர் என்பதும், தொழிற்கட்சியை சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. அமெரிக்க அதிபருக்கு வேண்டாத ஒருவராகவும் இருக்கிறார். இந்த ஊர்வலத்தில் வடக்கு இங்கிலாந்து ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் அதிகம் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென 4.2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு கோரிக்கை முன் வைத்திருந்தார்கள். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஏற்கெனவே புதிய…

சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பு 100 வீதமும் தோல்வி அறிவிப்பு

கடந்த ஒரு மாத காலமாக கடைசிப் போர் கடைசி நாள் கடைசி மணி என்று கூறிக் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போர் நேற்று இரவுடன் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டதாக எஸ்.டி.எப் என்ற குர்டிஸ்தானிய படைகள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சாண்ட்ராசும் இதை உறுதி செய்தார். ஆனால் சிரிய அதிபர் ஆஸாட்டும், ரஸ்யாவும் இதை ஒப்புக்கொள்ளவில்லை போர் தொடரும் என்கிறார்கள். அலைகள் 23.03.2019

இராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்து: 100 பேர் பலி

இராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசுல் நகரில் பிரபல சுற்றுலாப் பகுதியாகக் கருதப்படும் டைகிரிஸ் நதிக்கு அருகில் குர்திஷ் புத்தாண்டை சிறிய அளவிலான கப்பல் ஒன்றில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின்போது திடீரென விபத்து ஏற்பட்டதில் கப்பல் கவிழ்ந்தது. இதில் மூழ்கி 100 பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு மீறி நபர்களை ஏற்றியதே விபத்துக்குக் காரணம்'' என்று செய்தி வெளியானது. இந்த விபத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு இராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி கூறும்போது, ''மூன்று நாட்கள் தேசம் முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும்'' என்றார். இந்த விபத்து இராக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது.

ரியூப் தமிழ் தாயகத்தில் பெருமையுடன் வழங்கும் ஐரா

ரியூப் தமிழ் - எஸ். ஜெயபாலசிங்கம் இணைந்து வழங்கும் பிரமாண்டமான படைப்பு ஐரா. இலங்கையில் ஐம்பது திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐரா திரைப்படம். மறுபடியும் தமிழ் திரை வர்த்தகத்தில் புதிய காலடி பதிக்கப்படுகிறது.. முதலில் மாதம் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையில் இலங்கையின் திரைகளில் ரியூப்தமிழ் மற்றும் எஸ் .ஜெயபாலசிங்கம் இணைந்து வழங்கும் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அடுத்த மாதம் இன்னொரு திரைப்படம் வரவுள்ளது. அலைகள் 23.03.2019

ரம்பிற்கு எதிரான றொபேட் மூலர் விசாரணை அறிக்கை சமர்ப்பணம்

இரகசியங்களை வெளியிடும்படி டெமக்கிரட் கோஷம்.. குடும்பத்தை தொட வேண்டாமென தடுத்த மாயக்கரம் யார்..? புகை ஆரம்பிக்கிறது.. அலைகள் 23.03.2019

ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்: குஷ்பு

தமிழக காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நேற்று வரை இழுபறி நீடித்து வந்தது. வேட்பாளர்களுக்காகத் தொகுதியை வாங்கி வைத்து பின்னர் எதிரணியினர் பலமான வேட்பாளரை நிறுத்தியதும் அதற்காக தங்கள் வேட்பாளரை மாற்றுவதா என்ற குழப்பத்திலேயே இழுபறி நீடித்தது. காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார், அதே போன்று அவரது அணியில் உள்ள குஷ்புவும் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எதிரானவர்கள் கை ஓங்கியதால் இருவருக்கும் முதலில் தொகுதி இல்லை என்ற தகவல் வெளியானது. காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில்…

மருதடி விநாயகர் கோவில் கொடியேற்றம்

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நேற்று (22) ஆரம்பமாகியது. தொடர்ந்து 25தினங்களுக்கு திருவிழா நடைபெறுமென்பதுடன், இம்மாதம்; 31ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் எதிர்வரும் 14ஆம் திகதி இரதோற்சவமும் 15ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறும்.

புதையல் பொருட்களுடன் வவுனியாவில் நால்வர் கைது

வவுனியா, வடக்கு மருதோடை கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரமோட்டைக் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் பொருட்ளையும் கைப்பற்றியுள்ளனர். புதையல் பொருட்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற குறித்த 4 பேரையும் புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு பழைய காலத்துப் புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு, மலையாள மாந்திரிகப் புத்தகங்கள் உள்ளிட்ட புதையல் பொருட்களுடன் பெக்கோ இயந்திரத்தையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் விசாணை செய்தபோது, காஞ்சிராமோட்டைக் காட்டுப்பகுதியில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி புதையல் தோண்டியமை தெரியவந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி ஆகிய பகுதிளைச் சேர்ந்த 35, 40, 42 வயதுளையடைய 4 சந்தேக நபர்ளைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.…