முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் – சமந்தா

என்னைப் பொறுத்தவரையில், நான் நடிக்கும்போது முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் என சமந்தா தெரிவித்துள்ளார்.

ஷிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக திவ்யான்ஷா கெளசிக் நடித்துள்ளார்.

படத்தில் நாக சைதன்யாவுக்கும் திவ்யான்ஷாவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உள்ளன. டீஸரில் லிப் டு லிப் காட்சி கூட உள்ளது.

வருகிற ஏப்ரல் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் நாக சைதன்யாவும் சமந்தாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமந்தாவிடம் அந்த முத்தக்காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சமந்தா, “எனக்கும் சாய்க்குமான உறவு, நட்பு, திருமணம் என்பது பிரமாதமான ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் நிஜத்துக்கும் இடைவெளி உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நான் நடிக்கும்போது முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான்.

இதைத்தான் ரசிகர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அடிப்படைதான் எனக்கும் சாய்க்கும் பொதுவானது. நானும் திருமணமானவர், அவரும் திருமணமானவர். இதில் வித்தியாசங்கள் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts