வில்லிகளாக மாறும் கதாநாயகிகள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். இப்போது கதாநாயகிகளும் காதல், டூயட்களில் இருந்து விடுபட்டு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வில்லி வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். வில்லிக்குத்தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். வில்லத்தனத்துக்கு முன்னோடியாக இருப்பவர் ரம்யாகிருஷ்ணன், படையப்பா படத்தில் மிரட்டி இருந்தார். இப்போதுள்ள கதாநாயகிகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன என்று கேட்டால் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்கிறார்கள். காஜல் அகர்வால் இதுபோல் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். அவர் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. தேஜா இயக்கும் சீதா தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலுக்கு எதிர்மறை கதாபாத்திரம். ஏற்கனவே நயன்தாரா கோலமாவு கோகிலாவில் கஞ்சா…

திரை விமர்சனம்: நெடுநல்வாடை

வயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலை யில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடு கிறார் அவரது மகள். சொத்தில் பங்கு கொடுக்க நேரும் என தங்கை மீதும் அவளது குழந்தைகள் மீதும் வெறுப்பை உமிழ்கிறான் செல்லை யாவின் மகன் கொம்பையா (மைம் கோபி). மகனின் எதிர்ப்பை மீறி மகளையும் பேரன் இளங்கோ (எல் விஸ் அலெக்ஸாண்டர்)வையும், பேத்தியையும் வைத்துக் காப் பாற்றுகிறார் செல்லையா. தன்னை சொந்தக் காலில் நிற்கவைத்து அழகு பார்ப்பது தான் தாத்தாவின் ஒரே லட் சியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி உழைக்கிறான். ஆனால் சிறுவயதில் அவனுடன் படித்த அமுதாவுடனான (அஞ்சலி நாயர்) காதலும் அதற்கு வரும் எதிர்ப்புகளும் அவனது முன்னேற் றப் பாதையில் தடைக் கற்களா கின்றன. தாய்மாமனின் வெறுப்பு,…

அஜித்துடன் நடித்த அனுபவம்: மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே

அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே. அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அஜித்துடன்…

என் கடைசிப் படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி

மகாபாரதத்தை தான் திரைப்படமாக எடுத்தால் அது தன் கடைசிப் படமாக இருக்கும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார். மகாபாராதம் என்றால் குறைந்தது ஒரு பத்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த ஊது ஊதுகிறார் என்று எதிர்பார்க்கலாம் .. ? 'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில்,…

முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் – சமந்தா

என்னைப் பொறுத்தவரையில், நான் நடிக்கும்போது முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் என சமந்தா தெரிவித்துள்ளார். ஷிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக திவ்யான்ஷா கெளசிக் நடித்துள்ளார். படத்தில் நாக சைதன்யாவுக்கும் திவ்யான்ஷாவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உள்ளன. டீஸரில் லிப் டு லிப் காட்சி கூட உள்ளது. வருகிற ஏப்ரல் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் நாக சைதன்யாவும் சமந்தாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமந்தாவிடம் அந்த முத்தக்காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சமந்தா, “எனக்கும் சாய்க்குமான உறவு, நட்பு, திருமணம் என்பது பிரமாதமான ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் நிஜத்துக்கும் இடைவெளி உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நான்…

முடிவுக்கு வருகிறதா அத்வானியின் அரசியல் பயணம்?

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் அத்வானி. நாடு சுதந்திரமடையும் முன்பு, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வாழ்ந்த இடத்தையும், பூர்வீகத்தையும் விட்டு உடுத்தியிருந்த உடைகளோடு அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்த குடும்பங்களில் அத்வானியின் குடும்பமும் ஒன்று. அத்வானி குடும்பம் மும்பை வந்தது. கராச்சியில் இருக்கும்போதே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்திருந்த…

ஜனாதிபதி முறையை நீக்க ஐ.தே.க. பூரண ஆதரவு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவிக்கும் என அக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். கட்சியின் மாநாட்டிலும் இந்த நிலைப்பாட்டினை உறுதி பூண்டுள்ளோம். கடந்த…

2020 இற்குள் வீடில்லாத ​அனைவருக்கும் சொந்த வீடுகள்

2020ஆம் ஆண்டாகும்போது நாட்டில் இருப்பிடம் இன்றி வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வீடொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் திறன் எம்மிடமுள்ளது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெரை பிரதேச செயலகப் பிரிவில் மத்தலையில் நிர்மாணிக்கப்பட்ட 180வது சியத்லங்கா கம கம் உதாவ உதாகம மாதிரிக் கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், என்னதான் சேறுபூசல்களும் பொய் பிரசாரங்களையும் மேற்கொண்டாலும் எமது நாட்டில் வீடில்லாமல் இருந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக மேற் கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை. எமது நாட்டில் வீடில்லாமல் வாழ்ந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் எமது வீடமைப்பு திட்டத்தினை…

6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´ எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை…