ஆதி – ஹன்சிகா நடிக்கும் ‘பார்ட்னர்’

ஆதி – ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு ‘பார்ட்னர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘யு-டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் (2018) செப்டம்பர் மாதம் ரிலீஸானது. பிரதான வேடத்தில் சமந்தா நடித்தார். தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘பார்ட்னர்’ என்ற படத்தில் நடிக்கிறார் ஆதி. மனோஜ் தாமோதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், ‘டோரா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

ஹன்சிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஆதி ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காமெடியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஃபேண்டஸியும் உள்ளது. இன்று (மார்ச் 20) பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்துக்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

Related posts