அஜித்தை ஒருதலையாக காதலிக்கிறேன்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியவர். தனது முகநூல் பக்கத்தில் தான் அவர் தனது புகார்களை பதிவிடுவார். இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித் குறித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகர் அஜித்தை புகழ்ந்து இருப்பதோடு, அவரை ஒருதலையாக காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பதிவில், “அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல”, என அவர் அஜித்தை பற்றி புகழ்ந்துள்ளார்.

Tags:

Related posts