நயன்தாராவின் ஐரா திரைப்பட வெளியீட்டில் தாயகத்தில் ரியூப் தமிழ்

நயன்தாரா இரட்டை வேடங்கள் ஏற்று நடித்துள்ள ஐரா என்ற திரைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கான இலங்கை உரிமையை வாங்கியுள்ளார் பிரபல திரைப்பட வெளியீட்டாளரான வல்வை எஸ். ஜெயபாலசிங்கம்.

இப்படம் யாழ்ப்பாணத்தில் ரியூப் தமிழ் அனுசரணையுடன் மகத்தான வெளியீடு காண இருக்கிறது.

தமிழ் திரைப்பட விநியோகத்தில் புதிய காலடி வைக்கிறார் எஸ். ஜெயபாலசிங்கம் அவருடன் இணைந்து ரியூப்தமிழும் திரைப்பட வெளியீட்டில் இரு கால்களையும் பதிக்கிறது.

இதுவரை மூன்று திரைப்படங்களை வெளியிட்ட ரயூப் தமிழ் நிறுவனம் இப்போது முற்றிலும் தமிழக நடிகர்களின் படங்களை இலங்கையில் திரையிடும் முயற்சியில் வெளியீட்டாளர் எஸ்.ஜெயபாலசிங்கத்துடன் கைகோர்க்கிறது.

தற்போது கனடாவில் வாழும் எஸ். ஜெயபாலசிங்கம் அவர்கள் மேலும் பல திரைப்படங்களை வேண்டியுள்ளார். கொழும்பில் முக்கிய பணிகளை பிரணவன் யோகசபாபதிப்பிள்ளை முன்னெடுத்துள்ளார்.

யாழ். குடாநாட்டுக்கான வெளியீட்டு பணிகளில் ரியூப் தமிழ் கைகோர்க்கிறது.

இது ரியூப் தமிழின் இன்னொரு காலடியாகும்..

யாழ்ப்பாணத்தில் ரியூப்தமிழ் எப்.எம். பணியாளர்கள் இப்பணியை முன்னெடுத்துள்ளனர்.

அலைகள் 17.03.2019

Related posts