இந்தியர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவில்லை

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச் சிக்கேற்ப இந்தியர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வில்லை. இந்தியர்களிடம் தொழில் திறன் குறைவாக உள்ளது என்று ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கினி ரோமெட்டி கூறினார்.

மும்பையில் நிறுவனத்தின் திறன் மேம்பாடு குறித்த கருத்தரங் கில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவில் 18,000 கோடி டாலர் மதிப்பு மிக்க சாஃப்ட்வேர் துறை மூலம் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் உரிய வேலைக்கேற்ற திறமை மிக் கவர்கள் கிடைப்பதில்லை என்றார். பல்கலைக்கழக பட்டத்தை விட வேலைக்கேற்ற திறமைதான் மிக வும் அவசியம் என்றார். இந்தியா வில் பொறியியல் பட்டதாரிகள் பலரும் வேலையின்றி திண்டாடு கின்றனர். ஆனால் குறைந்த படிப்பு கொண்ட தொழில்திறன் பெற்றவர்கள், அனுபவம் காரண மாக அதிக ஊதியம் பெறு கின்றனர்.

பொறியியல் பட்டம் மற்றும் வணிகவியல் பட்டம் பெற்ற நான் கில் மூன்று பேர் வேலையில் லாமல் உள்ளனர். சமீபத்தில் சிஎம்ஐஇ என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில், 3 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கியிருப்ப தாக குறிப்பிட்டிருந்தது.

ஆனால் உண்மையில் வேலை வாய்ப்பு உள்ளது. உரிய நபர்கள்தான் கிடைப்பதில்லை. வேலைக்குரிய திறமை மிக்கவர் களுக்கு பஞ்சம் நிலவுவதுதான் உண்மையான பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறையினரும் அரசும் இணைந்துதான் இந்தப் பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தொழில்நுட்பம் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்று கேட்டதற்கு, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்கள் நிறுவனம் சமூக மேம்பாட்டு திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. இதில் முக்கியமானது பெண்களுக்கு கல்வியளிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவதாகும் என்றார்.

கல்வித்தரம் இல்லை

இந்தியாவில் உள்ள 65 சதவீத தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் போதிய பயிற்சி இல்லாதவர்கள். இவர்கள் வெறுமனே குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்கின்றனர். அந்த அளவுக்குத்தான் இந்திய கல்வித் தரம் அவர்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த தவறுக்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரு காரணம் என்றார்.

என்ன காரணத்தினாலோ இத்துறையை அறிவுசார் தொழில் துறை என்கின்றனர். ஒருவேளை அப்படியிருந்தால் ஏற்கெனவே இத்துறையில் உள்ளவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றிருக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு கற்பித்தல் என்பது மிகப்பெரும் சவால் என்றார்.

Related posts