வாழ்க்கை ஒரு பரிசு கில் எட்வேட்ஸ் நூலும் புதுமையான தமிழ் கல்வியும்..

மிகச்சிறந்த ஒரு நூல்.. உங்களை தடுக்கும் இரும்பு சுவர்கள் போன்ற மனத் தடைகளை உடைத்து விடுதலை பெற உதவும் நூல்.. படித்து, படித்ததை தொகுத்து சுவைபட தரப்படுகிறது.. இதுவும் தமிழ் கல்விதான்.. அலைகள் 16.03.2019

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 16.03.2019

01. நீங்கள் ஒரு பின்னடைவை சந்திக்கிறீர்களா.. அப்போதும் கவலை வேண்டாம்.. பிரமாண்டமாகவே சிந்தியுங்கள். 02. எப்போதுமே நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை பின் போட வேண்டாம் சூழ்நிலை கனியும்வரை காத்திருக்கத் தேவையில்லை. 03. உங்கள் யோசனைகள் மீது நடவடிக்கை எடுக்க மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 04. இக்கணம் என்பது ஒரு மாஜா ஜாலம் அதை உணர்ந்து செயற்படுங்கள். 05. துணிந்து பேசும் பழக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு வலுவூட்டிக் கொள்ளுங்கள். 06. நீங்களாகவே முன்வந்து முயற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தனித்துவ நடவடிக்கையாகும். 07. தோல்வி என்பது ஒருவிதமான மனோநிலையே என்பதைக் கண்டறிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தை தோல்வியாகவும் வெற்றியாகவும் பார்ப்பது மனம்தான். 08. ஒவ்வொரு பின்னடைவில் இருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். 09. ஆக்கபூர்வமாக சுய விமர்சனத்தை எப்போதும் செய்து கொள்ளுங்கள்.…

எண்ணம் பலித்ததாக.. ஸ்ருதி ஹாசன் புதிர்

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்தபிறகு வருடக் கணக்கில் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ஆனாலும் இணைய தளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் அவர் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான மெசேஜ் பகிர்ந்தார். ‘என்னைப் பொறுத்தவரை அது நடந்து விட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகிவிட்டது. தற்போதைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளியிருக்கிறான்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜில் ஸ்ருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது அவரே அதற்கு விடை கூறினால்தான் ஸ்ருதியின் சந்தோஷத்திற்கான காரணம் தெரியவரும்.

விஷால் – அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்தில் நடிகர் விஷால் - அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் என் திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்துள்ளார். மேலும், அக்கட்டிடம் முடிவு பெறும் நிலையில் இருப்பதால், மணப்பெண் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று அனிஷா ரெட்டி என்ற நடிகை, விஷாலுடனான திருமணத்தை உறுதி செய்தார். இவர் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்யவிருப்பது உறுதியானது. இன்று (மார்ச் 16) ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா இருவரது திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக…

கதை நான் ? எனக்கு என்னாச்சு..? இல்லை இவனுகளுக்கு என்னாச்சு…?

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ஒழுங்கா ஒரு வரி தமிழ் கதைக்கவே தெரியாத நான் கதை எழுதுவதா என்று விஜய் சேதுபதி சிரித்தாலும் சிரிக்கலாம்.. ஆனால் தமிழ் சினிமா அப்படித்தான் இருக்கிறது. கமலகாசனே கதை எழுதியபோது எனக்கென்ன குறையென நினைத்தாலும் நினைக்கலாம் சேதுபதி.. விக்ராந்த் ஹீரோவாக நடித்து 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தாக்க தாக்க’. இந்தப் படத்தை இயக்கியவர் விக்ராந்தின் சகோதரரான சஞ்ஜீவ். இவர், மறுபடியும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தப் படத்துக்கு, விஜய் சேதுபதி வசனம் எழுதினார். ஆனால், அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து வேறொரு படத்தை இயக்குகிறார் சஞ்சீவ். இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்…