மார்ச் 21 தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் அறிவிப்பு..

தோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் டென்மார்க் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது.

தமிழகத்தில் பரமக்குடியில் வரும் 21.03.2019 வியாழன் மாலை 3.30 மணிக்கு ஏ.எம்.எம். மஹாலில் தமிழர் நடுவ தலைவர் தோழர் தங்கராஜ் பாண்டியர் தலைமையில் நடைபெற இருக்கிறது.

டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது.

இது தொடர்பாக தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..

உலகத் தமிழர்களை தன் அறிவுப் பெரும் ஒளியால் இணைத்த தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் செல்வா பாண்டியரின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.

Related posts