பிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து

ஒரு காலத்தில் தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் தனது இனிய குரலால் கட்டிப் போட்டவர் உங்களில் ஒருவன் லோகேஷ்.

ஐ.பி.சியால் வாழ் நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்ட இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் இவருடைய பணி அபாரமானது.

யாழ். குடாநாட்டின் பல்வேறு இசைக்குழுக்களின் பாடல்களையும் தன் குரலால் அறிவிப்பு வழங்கி பாடல்களுக்கே புது மெருகு கொடுத்தவர்.

பின்னாளில் ஐ.பி.சியிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ரியூப் தமிழ் எப்.எம். புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்வந்து அவர் வழங்கிய வாழ்த்து இதுவாகும்.

அலைகள் 15.03.2019

யாழ். Tube Tamil FM ஒலி- ஒளி !
********************************
நான்கு மாடிகளுடன்,
காலக்கெதியில்,
ஐந்தாவது மாடியும்
நன்குயர்ந்து
ஒலி-ஒளி பரப்பி
நல்லபல தகவற்
களஞ்சியமென
நிமிர்ந்து
நிற்கப்போகும்
Tube Tamil FM
நிறுவனத்தின்,
தாயகத்தில் வாழும்
இளையோரின்
மறுமலர்ச்சிக்காக
மலர்ந்து தமிழ் மணம் பரப்பவென,
அதற்கெனப் பெயர் பெற்ற,
வெளி நாடுகளிலிருந்து,
வரவழைக்கப்படவிருக்கும்,
மகத்தான நவீன மின்னியற்
சாதனங்களால்
சம்பூரணப்படுத்தப்படவிருக்கும்,
சகல நுண்ணியற் கலைக் கோவிலாம்
முத்தமிழ்க் கலைக்கூடத்துடன் கூடிய,
புத்தகச் சந்தையுமாங்கே
அமைந்திடப்போகும்,
அத்திபார எழுச்சிக்கான
அச்சவாரமாக,
இப்பொழுதே – எமது
இனிப்பான நல்
வாழ்த்துக்கள் !!!
அன்றாடம் அகில உலக
செய்திகளை, அழகு தமிழில்
ரத்தினம் சுருக்கமாக
சிரத்தையுடனும், சிரித்த
முகமலர்ச்சியுடன் சொல்வதிலும்,
காட்சிப்படுத்துவதிலும்
வல்லவர் – நல்லவர்
ஆசிரியமணி –
சொற்றமிழினியர்
உயர்திரு . கி.செ. துரை
அவர்களையும்,
யாழ். Tube Tamil FM
நிறுவனர்களையும்
நன்றியுடன், வணங்கி,
வரவேற்கின்றோம் !!!
சத்தியமே ஜெயம் !!!
🌷💐💐🙏💐💐🌷

Related posts