நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச் சூடுகள் 40 பேர் பலி..

நியூசிலாந்து கிறஸ்சேர்ஜ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இரண்டு மசூதிகளில் இன்று இடம் பெற்ற வெள்ளி தொழுகையின் போது துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை 40 பேர் பலி 27 பேர் படுகாயம்..

நான்கு சந்தேக நபர்கள் கைது அவர்களில் ஒருவர் பெண்.. பிரதான சந்தேக நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயது நபர், வெளிநாட்டவர் வெறுப்பு துவேஷம் கொண்டவர்.

மேலும் ஒரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் பொறுப்பதிகாரி மைக் புஸ் தெரிவிப்பு..

நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அட்றீன் கறுப்பு நாள் என்று கவலை வெளியிட்டார்.

300 பேர் இருந்த மசூதிக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் தொடர் துப்பாக்கிப் பிரயோகம்..

மஜீட் அல் நூர் மசூதி..

லின்ட்வூட் மஸ்ஜிட் மசூதி ஆகியவையே தாக்குதலுக்குள்ளானவை.. இரண்டுக்கும் இடையே ஆறரை கி.மீ இடைவெளி.

மேலும் தாக்கதல் நடக்கலாமென எச்சரிக்கை..

நாடு முழுவதும் பாரிய தேடுதல் வேட்டை..

விபரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..

அலைகள் 15.03.2019

Related posts