தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் மலேசியா

தோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் அனுட்டிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது.

டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது.

இது தொடர்பாக தமிழர் களம் மலேசிய வெளியிட்டுள்ள அறிவிப்பு..:

———————-

தமிழர் தேசிய தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 21ஐ தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக தமிழர் நடுவம் அறிவித்துள்ளது.

இந்நாளை நினைவுகூரும் வகை எதிர்வரும்
23.03.2019
மாலை 6.00மணிக்கு
Sentul Curry House உணவக அரங்கில்
“தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்” எனும் தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்நிகழ்ச்சியில் தமிழர் தேசிய தந்தையையும் அவர்தம் தமிழர் தேசிய கருத்தியலையும் தமிழர்கள் உள்வாங்கி தெளிந்திட வழிசெய்யும் வகையாக, தமிழர் இனமீட்சிக்கு உலக அரசியல் அறிவும் ஆளுமையும் அடிப்படைத் தேவை எனும் தமிழர் தேசிய தந்தையின் கூற்றுக்கு, வடிவம் கொடுத்து கற்பித்து வரும் MASTER கி.செ.துரை(K.S.THURAI DENMARK) அவர்களின் எழுத்தில் “பாண்டிய நிலா” எனும் நூல் வெளியீடு காண்கிறது.

தமிழர் தேசிய கருத்தியல் எனும் அழிவில்லா பேரொளியை ஊட்டி நமக்கு வழிகாட்டும், தமிழர் தேசிய இன அரசியல் ஆசானை, தமிழர் தேசிய ஒளியூட்டி நாளில் வணங்கி, பாண்டிய நிலாவின் அறிவொளியை பெற்று, இனமீட்சிக்கான அறிவாளுமையை வளர்த்து களம் காண்போம்.

இன்றைய உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒப்பற்ற நிலையை அடைந்து, அறம்சார் அதிகார ஆளுமையை செலுத்தவிருக்கும் தமிழர் தேசிய இனத்திற்கு பேரொளியாக வழிகாட்டும் தமிழர் தேசிய தந்தையின் கூற்றின்படி, இளந்தமிழர்களுக்கு உலக அரசியலை பயிற்றுவிப்போம். தன் எதிரி யார்? நண்பன் யார்? என அடையாளம் காட்டுவோம். இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? என அறியாமலேயே வஞ்சக சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனத்திற்கு இயக்கும் வழிகாட்டி வழிநடத்துவவாரீர்

தமிழர்கள் அனைவரும் திரண்டு வாரீர்

ஏற்பாடு
#தமிழர்_நடுவம் மலேசியா
#தமிழர_களம் மலேசியா

Related posts