2020-ல் ராஜமவுலியின் அடுத்த படம் ரிலீஸ்

பாகுபலி 2க்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். சில தினங்களுக்கு முன் பூஜை நடந்தது. ஐதராபாத் அலுமினியம் பேக்டரி ஒன்றில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இங்கு பிரமாண்ட செட் போட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சியை ராஜமவுலி படமாக்குகிறார். இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்கள்.

படத்துக்கு ஆர் ஆர் ஆர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ராஜமவுலி, ராமராவ் (ஜூனியர் என்டிஆர்), ராம் சரண் தேஜா பெயர்களின் முதல் எழுத்துக்களை வைத்து, இப்படி டிரிபிள் ஆர் என்று தலைப்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில், ராம ராவண ராஜ்ஜியம் என்பதேபடத்தின் தலைப்பு என்றும், அதன் சுருக்கமே டிரிபிள் ஆர் என்றும் டோலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்நிலையில் படம் தொடர்பான பிரஸ்மீட் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஹீரோயினாக அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படம் ஜூலை 30-ம் தேதி 2020-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts