யாழ்ப்பாணத்தில் ரியூப்தமிழ் நாலு மாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

ரியூப் தமிழ் எப்.எம் நிறுவனத்தின் நான்கு மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் யாழ்ப்பாணத்தில் முக்கிய கேந்திரப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

நேற்று புதன் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பெண்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்கள் என்பதே அதுவாகும்.

தற்போது ரியூப் தமிழ் எப்.எம்மின் தாயக நிர்வாகியாகவும் திருமதி. டிவனியா முகுந்தன் அவர்களே இருக்கிறார். பெண்களை முன்னிலைப்படுத்தி பணிகளை முடுக்கிவிட்டது இந்த நாளின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

டென்மார்க் கஜன், யாழ். அஜய் உட்பட ரியூப்தமிழ் எப்.எம். ஊடகவியலாளர்களான செந்தூரன், நிவேதிகா, ராம்கி, மயூரதன், லிமா, சங்கவி, அம்பாலிகா, பிரசாந்த் உட்பட கட்டிட ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ரியூப் தமிழ் நிறுவனத்தின் வளர்ச்சி வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலடியாகும். போரினால் பாதிக்கப்பட்ட தாயகத்தின் மறுமலர்ச்சிக்கும், புலம் பெயர் நாடுகளின் புது வகையான தொடர்புக்குமான புத்தம் புதிய வலையாக்கமாக இது அமைவு பெறும்.

சர்வதேச உள்ளக கட்டுமானங்களை எதிர் கொள்ளும் தூரப்பார்வையுடன் அமைக்கப்படுகிறது.

மேலும் இதில் ஒரு முக்கியமான விடயம் இதுவரை சிந்தித்த புரி தேய்ந்த மரபு ரீதியான சிந்தனை வழியாக சிந்திக்காமல், யுனிக்கான தனித்துவமான சிந்தனை ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் உலக பொருளாதார மாற்றங்களுக்கு அமைவாக சர்வதேச தரத்தில் இதன் உள்ளக கட்டமைவுகள் அமையவுள்ளன. அடுத்த ஆண்டு ஐந்தாவது மாடி அமைக்கப்படும்.

இப்பொழுதே உலகின் பல பாகங்களில் இருந்தும் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன.

ரியூப் தமிழ் எப்.எம் இப்போது யாழ். நாவலர் வீதியில் இயங்கி வருகிறது, இந்த ஆண்டு புதிய கட்டிடம் அமைய அதி நவீனமான ஊடக இல்லம் நோக்கி நகர்த்தப்பட இருக்கிறது.

புதிய கட்டிடம் வானொலி, சமூகவலைத்தளங்கள், காணொளி பிரிவென இரு தளங்களில் இயங்க இருப்பதாக அதன் பொறுப்பாளர் ரவிசங்கர் சுகதேவன் கூறுகிறார்.

மேலும் முற்றிலும் நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன, சர்வதேச தரத்திலான நியுணத்துவமிக்க கருவிகள் ஐரோப்பாவில் இருந்து இலங்கை புறப்படவுள்ளன.

இன்று ஊடகத்துறையை அதி நவீனப்படுத்த வேண்டுமாக இருந்தால் சுவீடன் நாட்டின் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரியூப்தமிழ் காரியாலயம், கடைத்தொகுதி, தங்குமிட வசதி என்பன கொண்டு யாழ் மண்ணில் வானுயர்ந்து நிற்கப்போகும் இந்த மாளிகையின் தோற்றம் டென்மார்க்கின் அழகிய கட்டிட அமைப்பை கொண்டு எழுந்து நிற்க இருக்கிறது.

தாயக இளையோருக்கு தொழில் வாய்ப்பு, நவீன முன்னேற்றம் என்று சர்வதேச அறிஞர்களுடன் கைகோர்து வீறு நடை பயிலும் புதிய காலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ரியூப் தமிழின் தாயக பிரதிநிதி கஜன் அவர்கள் கட்டிட பணிகளை பார்வையிடுகிறார். சுமார் நாற்பதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

பழைய கட்டிடத்தில் ரியூப் தமிழ் புத்தக சந்தை யாரும் எதிர்பாராத புதிய கோணத்தில் திருத்தியமைக்கப்படவுள்ளது இன்னொரு தகவலாகும்.

இது மட்டுமா இன்னமும் இருக்கிறது.. யாழ்ப்பாணத்தில் “ரியூப் தமிழ் டவர்” வரப்போகிறது 2020 ல் அறிவிப்பு வெளியாகலாம்.

வான் முட்டும் கோபுரத்தில் பட்டொளி வீசிப்பறக்கும் நமது கொடி..

அலைகள் 14.03.2019

Related posts