யாழ்ப்பாணத்தில் ரியூப்தமிழ் நாலு மாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

ரியூப் தமிழ் எப்.எம் நிறுவனத்தின் நான்கு மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் யாழ்ப்பாணத்தில் முக்கிய கேந்திரப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது. நேற்று புதன் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பெண்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்கள் என்பதே அதுவாகும். தற்போது ரியூப் தமிழ் எப்.எம்மின் தாயக நிர்வாகியாகவும் திருமதி. டிவனியா முகுந்தன் அவர்களே இருக்கிறார். பெண்களை முன்னிலைப்படுத்தி பணிகளை முடுக்கிவிட்டது இந்த நாளின் இன்னொரு சிறப்பம்சமாகும். டென்மார்க் கஜன், யாழ். அஜய் உட்பட ரியூப்தமிழ் எப்.எம். ஊடகவியலாளர்களான செந்தூரன், நிவேதிகா, ராம்கி, மயூரதன், லிமா, சங்கவி, அம்பாலிகா, பிரசாந்த் உட்பட கட்டிட ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ரியூப் தமிழ் நிறுவனத்தின் வளர்ச்சி வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலடியாகும். போரினால் பாதிக்கப்பட்ட தாயகத்தின் மறுமலர்ச்சிக்கும், புலம் பெயர் நாடுகளின்…

2020-ல் ராஜமவுலியின் அடுத்த படம் ரிலீஸ்

பாகுபலி 2க்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். சில தினங்களுக்கு முன் பூஜை நடந்தது. ஐதராபாத் அலுமினியம் பேக்டரி ஒன்றில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இங்கு பிரமாண்ட செட் போட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சியை ராஜமவுலி படமாக்குகிறார். இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்கள். படத்துக்கு ஆர் ஆர் ஆர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ராஜமவுலி, ராமராவ் (ஜூனியர் என்டிஆர்), ராம் சரண் தேஜா பெயர்களின் முதல் எழுத்துக்களை வைத்து, இப்படி டிரிபிள் ஆர் என்று தலைப்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில், ராம ராவண ராஜ்ஜியம் என்பதேபடத்தின் தலைப்பு என்றும், அதன் சுருக்கமே டிரிபிள் ஆர் என்றும் டோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் படம் தொடர்பான பிரஸ்மீட் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில்…

பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம் சத்யராஜ்

அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம் என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜ், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.…

ஒரே தலைப்பில் இரண்டு படங்கள்

சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் நடிக்கும் படங்களின் தலைப்பும் ‘ஹீரோ’ என வைக்கப்பட்டுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்க, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (மார்ச் 13) படத்தின் பூஜை நடைபெற்றது. ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்துக்கும் ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இதற்குமுன்…

நயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்

லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் காரணமாக போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும், மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பரிந்துரைப்பதாக அரசு நேற்று அறிவித்தது. அதுவரை சிபிசிஐடி விசாரணை…

வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புனர்வு ஊர்தி இன்று(14) கிளிநொச்சியை சென்றடைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை சென்றடைந்தது. இந்நிலையில் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும். போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெனீவா அமர்வில் இலங்கை சார்பில் ஒரே குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக சுதந்திரக் கட்சி எம்.பி மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜெனீவாவில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாகவும் அவர் கூறினார். இக்குழுவில் இம்முறை நான் அங்கம் வகிக்க மறுத்துவிட்டேன். எனவே ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார். அதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய சமரசிங்க எம்.பி, குழுத் தலைவராக செயற்படும் அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும்…