அரசியல் தீர்வை பெற தொடர்ந்து விட்டுக்கொடுக்க தயார்

அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு யுத்தம் மீண்டும் உருவாகும் சூழலுக்கான ஆபத்தை எதிர்கொள்ளப்போகின்றோமா என்பதை அரசியல் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூன்று பிரதான தலைவர்களும் ஏற்கனவே இணங்கியுள்ள நிலையில், சகலரும் சமமாக மதிக்கப்படக்கூடிய வகையில், அரசியல் தீர்வொன்று விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரவு - செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத…