யாருக்கு வாக்களிக்கப் போகிறது கூட்டமைப்பு அலசல்..

தாயகத்தில் இருந்து பிரபல ஊடகவியலாளர் செந்தூரனின் பார்வை..

இவருடைய பார்வை புதிதாகவும் காத்திரமானதாகவும் உள்ளது.. என்ன சொல்கிறார் என்று பாருங்கள்..கேளுங்கள்..

இன்று கூட்டமைப்பிற்கு சங்கடமான நாள்தான்.. ஆனால் நாளை நல்லூர் திருவிழா வந்தால் சனம் மறந்து தூக்குக் காவடியில் தொங்கும் என்பதை தந்தை செல்வா காலம் முதல் தமிழரசு தெரிந்திருப்பதால் கவலையில்லை..

எதுவும் செய்யலாம்..

எதுவும் சொல்லலாம்..

சனம் தமிழரசுக்கு நாளைக்கும் வாக்களிக்கும் அவ்வளவுதான்..

ஆகவே தவறு மக்களிலேயே இருக்கிறது..

ஆனாலும் இன்று சிறிய மாற்றம் தெரிகிறது..

காதில் பூ சுற்ற முடியாத ஓர் இளைய தலைமுறை உருவாகிறது வடக்கே..?

ஒன்று இருந்த அரசியலும் தெரியாத ஒரு கூட்டமும் இன்னொன்று புதிதான ஒன்றைத்தேடிய கூட்டமுமாக இருக்கிறது.

ஒரு மாற்று அரசியலை தேடும் பாங்கு செந்தூரன் போன்ற இளைஞர்களின் ஆய்வில் உள்ளது..

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் – இந்த
நாட்டிலே நம் நாட்டிலே..

அலைகள்.. 12.03.2019

Related posts