முக்கிய வேடத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை

நடிகை அனுஷ்கா உடல் மெலிவு சிகிச்சைக்கு பிறகு ஒல்லியான தோற்றத்துக்கு மாறியதாக நெட்டில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அனுஷ்காவிடம் புதிதாக எந்த மாற்றமும் தெரிய வில்லை, புஷ்டியான தோற்றத்திலேயே இருப்பதாக அவரது படங்களை பகிர்ந்து நெட்டிஸன்கள் கமென்ட் பகிர்ந்தனர். அதுபற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பி இருக்கிறார் அனுஷ்கா. ஏற்கனவே தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்து பக்தி படத்தில் நடிக்க உள்ளார்.

ஐயப்பன் பக்தி சீசனின்போது ஐயப்பன் குறித்த திரைப்படம் வெளியாகி வருகிறது. இம்முறை பிரபலங்கள் இணையும் ஐயப்பன் படம் உருவாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார்.

முக்கிய வேடத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் கோபாலன் கூறி உள்ளார். இப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்கவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், அனுஷ்கா, சந்தோஷ்சிவன் போன்ற பிரபலங்கள் இணையும் இந்த ஐயப்பன் படத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts