முக்கிய வேடத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை

நடிகை அனுஷ்கா உடல் மெலிவு சிகிச்சைக்கு பிறகு ஒல்லியான தோற்றத்துக்கு மாறியதாக நெட்டில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அனுஷ்காவிடம் புதிதாக எந்த மாற்றமும் தெரிய வில்லை, புஷ்டியான தோற்றத்திலேயே இருப்பதாக அவரது படங்களை பகிர்ந்து நெட்டிஸன்கள் கமென்ட் பகிர்ந்தனர். அதுபற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பி இருக்கிறார் அனுஷ்கா. ஏற்கனவே தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்து பக்தி படத்தில் நடிக்க உள்ளார். ஐயப்பன் பக்தி சீசனின்போது ஐயப்பன் குறித்த திரைப்படம் வெளியாகி வருகிறது. இம்முறை பிரபலங்கள் இணையும் ஐயப்பன் படம் உருவாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். முக்கிய வேடத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை…

நடிகை ரோகிணி வேதனை

நடிகை ரோகிணி தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோயின், குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இளையராஜாவிடம் ஒரு கேள்வி கேட்கப்போய் அது வம்பில் முடிந்தது. இளையராஜா அவரை மேடையிலேயே திட்டினார். இது நெட்டில் பரவியதையடுத்து ரோகிணியை சிலர் கலாய்த்தனர். இன்னும் சிலர் அவரது கேள்விக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து ரோகிணி கூறும்போது,’அந்த விஷயத்தை நான் மறந்துவிட்டேன். இதோடு இப்பிரச்னையை நிறுத்திக்கொள்ளலாம்’ என்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரோகிணி. சமீபத்தில் மலையாள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் பிரதமர் மோடி பற்றி கமென்ட் வெளியிட்டார். எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் உள்ளது. தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள். இனிமேலும் ஃபாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்கு தேவையில்லை என கூறினார். இதையடுத்து பாஜக…

2020-ல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை மாற்றப்படும்

வரும் 2020-ம் ஆண்டு கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை உருவெடுக்கும் என்று அந்நாட்டு ராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார். இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், சமாதானத்தை நிலை நாட்டவும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் ராணுவத்தினர் முக்கிய பங்காற்றினர் என்றார். கண்ணிவெடிகளை அகற்றுவது ராணுவத்தினரின் பணிகளில் முக்கிய பணியாக உள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 2020-ம் ஆண்டு கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை மாற்றப்படும் என்று தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன. அதற்கேற்றாற் போல நாமும் மாற வேண்டும். ஆனால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிவுக்கு வழிவகுக்க கூடாது. தற்போதைய இளைஞர்கள் மத்திய்ல் கேளிக்கைக்கும், போதைக்குமே முக்கியத்துவம் உள்ளது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். இலங்கையில் கண்ணி…

இந்தியன் 2 ல் பணிபுரியாதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இந்தியன் 2'-வில் பணிபுரியாதது ஏன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் 2-ம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 'இந்தியன்' படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டனர். இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தில் பணிபுரியாதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது: 'இந்தியன் 2'-ல் நான் பணியாற்றவேண்டும் என்ற கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். டைரக்டர் சொல்லவேண்டும் என்று…

இந்தியன் 2 படத்தைச் சுற்றும் வதந்திகள்

கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தைச் சுற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. ஆனால், அனைத்துக்குமே மவுனமே பதிலாக அளித்து வருகிறது படக்குழு. மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிக்க படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு. இப்படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் போது, கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப் போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக அவருக்கு பொருந்தவில்லை என்கிறார்கள். மேலும், அவருக்கு மேக்கப் அப்பினால் அலர்ஜி ஆகியுள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு, லைகா நிறுவனம் பணத்தை தயார்…

யாருக்கு வாக்களிக்கப் போகிறது கூட்டமைப்பு அலசல்..

தாயகத்தில் இருந்து பிரபல ஊடகவியலாளர் செந்தூரனின் பார்வை.. இவருடைய பார்வை புதிதாகவும் காத்திரமானதாகவும் உள்ளது.. என்ன சொல்கிறார் என்று பாருங்கள்..கேளுங்கள்.. இன்று கூட்டமைப்பிற்கு சங்கடமான நாள்தான்.. ஆனால் நாளை நல்லூர் திருவிழா வந்தால் சனம் மறந்து தூக்குக் காவடியில் தொங்கும் என்பதை தந்தை செல்வா காலம் முதல் தமிழரசு தெரிந்திருப்பதால் கவலையில்லை.. எதுவும் செய்யலாம்.. எதுவும் சொல்லலாம்.. சனம் தமிழரசுக்கு நாளைக்கும் வாக்களிக்கும் அவ்வளவுதான்.. ஆகவே தவறு மக்களிலேயே இருக்கிறது.. ஆனாலும் இன்று சிறிய மாற்றம் தெரிகிறது.. காதில் பூ சுற்ற முடியாத ஓர் இளைய தலைமுறை உருவாகிறது வடக்கே..? ஒன்று இருந்த அரசியலும் தெரியாத ஒரு கூட்டமும் இன்னொன்று புதிதான ஒன்றைத்தேடிய கூட்டமுமாக இருக்கிறது. ஒரு மாற்று அரசியலை தேடும் பாங்கு செந்தூரன் போன்ற இளைஞர்களின் ஆய்வில் உள்ளது.. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் -…

அமெரிக்க முகாமுக்கு அருகேயிருந்த தலிபான் தலைவர்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ முகாமுக்கு அருகே நடக்கும் தொலைவில்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் முல்லா ஓமர் தங்கி இருந்தும் அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை எனும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து முல்லா ஓமர் தப்பித்து பாகிஸ்தானுக்குள் சென்று தலைமறைவாகிவிட்டார் என்று கடைசிவரை அமெரிக்கா நம்பிக் கொண்டிருந்தது. ஆனால், முல்லா ஓமர், அமெரிக்க ராணுவத்துக்கு தண்ணிகாட்டி ஜபுல் பகுதியில் உள்ள முகாம் அருகே 2013-ம் ஆண்டு தான் இறக்கும் வரை அங்கு வசித்து வந்துள்ளார். உலகத்துக்கே பெரியண்ணன் என்று சொல்லிக்கொண்டு தீவிரவாத்ததை அழிக்கப்புறப்பட்ட அமெரிக்கா, தன்னுடைய முகாமுக்கு அருகே தங்கி இருந்த தலிபான் அமைப்பின் தலைவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. அமெரிக்க சிஐஏ உலகிலேயே அதி வல்லமை வாய்ந்தது என்று கூறினாலும் இங்கு தோல்வி அடைந்துவிட்டது. 'சர்ச்சிங் ஃபார் அன் எனிமி'(Searching for an…

26 சதவீதமான ஆண்கள் புகைத்தலுக்கு அடிமை

இலங்கையில் தற்போது 26 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், டொக்டர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆண்கள் கொண்டுள்ளதாகவும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியுள்ளார். எனவே, எதிர்வரும் வருடங்களில் இவ்வாறு புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இதற்கமைய புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.