டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி

டென்மார்க் தமிழ் ஆர்டிஸ்ற் அசோசியேசன் என்ற பெயர் கொண்ட தமிழ் கலைஞர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் திரையிசை பாடல்களுக்கான நடனப் போட்டி ஒன்றை நடத்த இருக்கிறது. எதிர்வரும் யூன் மாதம் 09 ம் திகதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடத்த இருப்பதாக கலைஞர் சங்க நிர்வாகம் தெரிவிக்கிறது. நேற்று கொல்ஸ்ரபோ நகரத்தில் உள்ள கலாச்சார இல்லத்தில் கலைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக சபையோர் முன் வைத்த பல்வேறு ஆலோசனைகளை சபை சீர்தூக்கியது. அதில் நடனம், நாடகம், இசை என்ற மூன்று தலைப்புக்களில் முப்பெரு விழாக்களை இந்த ஆண்டு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஓரம்சமாக கோடை விடுமுறைக்கு முன்னதாக நடனப்போட்டி இடம் பெறப்போகிறது. நடன ரசிகர்கள் அதுவும் திரையிசை நடன ரசிகர்களுக்கு அன்றைய நாள் ஒரு…

அலைகள் காலை உலகச் செய்தி 11.03.2019 திங்கள்

கீழே விழுந்த எதியோப்பிய விமானத்தின் கதை.. பல நாடுகள் இந்த விமானமே வேண்டாமென நிராகரிப்பு.. விபரம் என்ன சிறப்பு செய்தி அழகிய காட்சிகளுடன்.. அலைகள் 11.03.2019

த.தே. கூ பா. உ. கொடும்பாவி எரிப்பு..

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கெதிராக கிரான் பிரதேசத்தில் கண்டன ஆர்பாட்டம் இன்று திங்கள் கிழமை(11.03.2019) காலை நடைபெற்றது. கிரான் இளைஞர்களினால் இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினை சட்ட வரையறைகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர் தமது அதிகாரத்தினை பயன்படுத்தி 2 கூலித் தொழிலாளர்களை கூண்டில் அடைத்துள்ளார். .எவ்வளவு அபிவிருத்தி வேலைகள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி விட்டு கூலியாளர்களை கூண்டில் அடைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தே இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரான் சுற்று வளைவு மையத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் பாதாதைகள் சிலவற்றினை கையில் ஏந்தியவாறும் பாராளுமன்ற உறுப்பினரது உருவம் தாங்கிய பொம்மையினை தூக்கிக் கொண்டு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக கிரான் சுற்று வளைவு மையத்தினை சுற்றி வந்தனர். ‘தமிழரசு கட்சியே ஏழைகளை சிறையில் வைப்பதா.”…

கொழும்பில் இன்று நள்ளிரவு முதல் விசேட சுற்றிவளைப்புகள்

மது போதையில் வாகனங்களைச் செலுத்துவதால் அதிகரித்துள்ள வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் களியாட்ட விடுதிகளை அண்மித்த பகுதியில் இன்று நள்ளிரவு முதல் விசேட சுற்றிவளைப்புக்கள் நடத்தப்படவுள்ளன. களியாட்ட விடுதிகளை சுற்றி அதிகரித்துள்ள டிபெண்டர் கலாசாரத்தை இல்லாமல் செய்யும் வரை இந்த சுற்றுவளைப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேல்மாகாணத்தில் நடத்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனத்தை செலுத்திய 527 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் வாகன அனுமதிப் பத்திரங்களை நிரந்தரமாக இரத்துச் செய்யும் வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்துக்குப் பொறுப்பான…

கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சிகளால் ஏமாற்றப்படும் ஒரு கட்சி..

தமிழர் கூட்டமைப்பிற்கு பொருத்தமான பெயரை இப்போதுதான் பெரும்பான்மை அரசியல்வாதி ஒருவர் வழங்கியுள்ளார். தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரை இவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது.. சிறீலங்கா பெரும்பான்மை கட்சிகள் காதில் பூ சுற்ற இவர்கள் தமிழ் மக்கள் காதுகளில் 70 வருடங்களாக பூ சுற்றி வருகிறார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.. இது குறித்த செய்தி.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக் கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியாளலர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதாக, ஆதரவு அளிப்பது தொடர்பில் உங்களின்…