இளையராஜா பாராட்டு விழாவில் முறைகேடு

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் இளையராஜாவுக்கு நடத்தப்பட்டப் பாராட்டு விழாவில் முறைகேடு நடந்துள்ளதாக சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும், அவருக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கே.ராஜன், “பாராட்டு விழா என்றால் மரியாதை செய்து ஒரு விருது வழங்கலாமே தவிர, மூன்றரை கோடி ரூபாய் அதற்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தயாரிப்பாளர்கள் செலவழித்த பணத்தில்தான் அவர் ட்யூன் போட்டார், இசையமைத்தார், பெயர் எடுத்தார், பல கோடிகள் சம்பாதித்தார். அப்படிப்பட்ட…

ஏமன் உள்நாட்டுப் போரில் ஒரே ஆண்டில் 4,800 பேர் பலி

ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போரில் கடந்த வருடம் மட்டும் பொதுமக்கள் 4,800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா. சபை தரப்பில், “ உலக அகதிகள் அமைப்பின் சார்பில் வியாழக்கிமை தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றன அல்லது காயமடைந்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது. ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் மீண்டும் ஒப்பு கொண்டனர். தென்மேற்கு ஆசிய நாடான…

அழகிரியால் மதுரையில் போட்டியிட தயங்கும் திமுக?

மதுரை மக்களவைத் தொகுதியை திமுக தலைமை, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவிவரும் தகவலால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மு.க.அழகிரியால் மதுரையில் போட்டியிட திமுக தயங்குவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இன்னும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக திமுக அறிவிக்கவில்லை. ஆனால், தென் மாவட்டத்தில் திமுக போட்டியிடும் முக்கிய தொகுதியாக மதுரை இருக்கும் என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கடைசியாக, மு.க. அழகிரி திமுக சார்பில் மதுரையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த முறை திமுக வேட்பாளராக களமிறங்கிய வேலுச்சாமி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், கருணாநிதி இருந்தபோதே அவரது மகன் அழகிரி திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலின்…

காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது ?

அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி நழுவிவிட முடியாது. அவ்வாறெனின் காணாமல் போனோருக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து பெறப்பட்ட ஆறு மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா அனாலிட்டிக்ஸ் ஆய்வுகூடத்திற்கு காபன் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவு அறிக்கையின்படி மன்னார் மனிதப்புதைகுழியிலுள்ள மனித எச்சங்கள் 1499 – 1719 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதுடன் தொடர்ந்து கூறுகையில், மன்னார் மனிதப்புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காபன் பரிசோதனை அறிக்கை குறித்து சந்தேகங்கள் இருக்குமாயின்,…

இராணுவ இரகசியங்களை இலங்கைக்கு தெரிவித்தவர் கருணாநிதி

இராணுவம் சம்மந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “மத்திய மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடு போவதாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, காணாமல் போன நிகழ்வுகள் உண்டு. டந்த காலத்தில் இராணுவம் சம்பந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால், சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் வரலாறு. தமிழக வரலாற்றிலும் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் காணாமல் போன திருட்டை…

பயிற்சிக்கு பின்னரே இனி ஆசிரிய நியமனம்

உலகத்தோடு இணைந்து போகக்கூடிய உலகை வெற்றிகொள்ளக்கூடிய நவீன கல்வித் திட்டத்தை ஏற்படுத்தும் பாரியதொரு பொறுப்பை தனது அரசாங்கம் ஏற்றுச்செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் 30 வருடங்களுக்கு முன்னர் கண்ட கனவு இப்போது நனவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது 80 ஆயிரம் கல்வி டிப்ளோமாப் பட்டதாரிகள் பணிபுரிவதாகவும் இவ்வருட இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார். எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய போதனாபீட டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது :- நாட்டில் நவீன கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப்…

உலக புத்தக நாளில் யாழ். நூல்நிலையத்தில் புத்தகம் வழங்கல்

நேற்று முன்தினம் உலக புத்தக நாள் இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் யாழ். பொது நூலக மேலாளரிடம் வைபவ ரீதியாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழில் பேருந்து தரிப்பிடத்தில் நின்ற மக்களுக்கு உலக புத்தக நாளை நினைவூட்டி நூறு பிரதிகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன. தன்னம்பிக்கையை வளர்க்கவும், வாசிப்புக் கலையை மேம்படுத்தவும், எடுக்கப்பட்ட இந்த பாரிய முயற்சிக்கு ரியூப் தமிழ் நிறுவனத்தின் தாயக உறவுகள் அரும்பணியாற்றி வருகிறார்கள். ஊர் ஊராக பாடசாலை பாடசாலையாக சென்று பணியாற்றி வருகிறார்கள். வீழ்ந்து போன அழிந்து போன வாசிப்புக்கலையையும், புத்தக வெளியீடுகளையும் புத்துயிர் பெறச் செய்ய இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் 10.000 புத்தகங்கள் இவ்வாறு வழங்கப்படுகின்றன, சித்திரை புத்தாண்டு வரை இந்தப்பணிகள் தொடரும்.. மே…