சமந்தா – காஜல் அகர்வால் கடும் போட்டி

இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற இணைய தளத்தில் பிரபல ஹீரோயின்கள் எல்லோருமே இணைந்திருக்கின்றனர். அவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு தங்களது ஃபாலோயர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் தங்களது டாப்லெஸ் படங்களையும், குளியல் அறை வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள்.

இன்னும் சிலர் காதலனுடன் லிப் டு லிப் கிஸ் செய்திருக்கும் கிக்கான காட்சிகள் வெளியிடுகிறார்கள். நம்மூர் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கிடையே கடந்த சில மாதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும்போட்டி நிகழ்ந்து வருகிறது. இருவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் தினம் வெளியிடுகின்றனர். டுவிட்டர் பக்கத்தில் தவறாமல் ஏதாவது ஒன்றிரண்டு மெசேஜ் பதிவிடுகிறார்கள்.

சில தினங்களாக இந்த போட்டி அதிகரித்துவருகிறது. புதுவித காஸ்டியும்களில் சமந்தா தனது கவர்ச்சி படங்களை வெளியிடும் அதேவேளையில் வெளிநாட்டிலிருந்தாலும் காஜல் அகர்வால் தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுகிறார். சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களும், டுவிட்டர் பக்கத்தில் 73 லட்சம் ஃபாலோயர்களும் உள்ளனர்.

காஜலுக்கு டுவிட்டரில் 20 லட்சம் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் 90 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை கூட்டத்தான் இருவருக்குள் தற்போது இணைய தள மோதல் நடந்து வருகிறதாம். ‘இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு ஃபாலோயர்கள் அதிகமாகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு லட்சங்களில் வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts