தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் – மார்ச் 21

தமிழர் தேசிய கருத்தியல் எனும் நவீன அறிவுசார் அரசியல் தத்துவத்தை தமிழர்களுக்கு வழங்கி, 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருள் சூழ்ந்து காணப்படும் தமிழர்களின் அரசியலுக்கு தன் உயிரால் ஒளி கொடுத்து வழிகாட்டிச் சென்றவர் தமிழர் தேசியத் தந்தை செல்வா பாண்டியர் அவர்கள்…

தமிழர் தேசிய தந்தை அவர்கள் தன் இன்னுயிரால் தமிழின இளைஞர்களுக்கு தமிழர் தேசிய அரசியல் ஒளியூட்டி சென்ற மார்ச் 21 ம் நாளை தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக வழிபட தமிழர் நடுவம் முடிவு செய்துள்ளது …

நடுவத்தின் தலைமையகம் சார்பாக மார்ச் 21 அன்று மாலை 3 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் உள்ள AMM மஹாலில் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் வழிபாடும் தமிழர் தேசிய கருத்துரை நிகழ்வுகளும் நடைபெறும். ஒளியூட்டியின் அறிவொளியைப் பெற அனைத்து தமிழ்க்குடி உறவுகளையும் நிகழ்விற்கு அன்போடு அழைக்கிறது நடுவம்.

தமிழர் தேசிய தந்தையவர்களின் பேராற்றலையும் அவர்தம் தமிழின மீட்புக் களமாடல்களையும் காவியமாக்கிய “பாண்டிய நிலா” எனும் நூல் ஒளியூட்டி நாள் நிகழ்வில் வெளியிடப்படும். இந்நூலானது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பள்ளித் தோழர் கி.செ.துரை மாஸ்டர் அவர்களால் படைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காவியமாகும்…

எனவே உலகெங்கும் பரவி வாழும் நடுவத்தின் அமைப்பாளர்களும், ஆதரவாளர்களும் மற்றும் தமிழினப் பெருங்குடி மக்களும் தத்தமது நாடுகளிலும், ஊர்களிலும், வீதிகளிலும், இல்லங்களிலும் தமிழர் தேசிய தந்தையவர்களின் திருவுறுவப் படத்திற்கு அகல் விளக்கேற்றி ஒளியூட்டியவனின் அறிவொளியை இவ்வுலகத்தாருக்கும் கடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…

இவண்,

தலைமைக் குழு,
தலைமையகம்,
சுவாமி இராமதாசர் அரங்கம்,
திருச்சி.

Related posts