விஸ்வாசம்’ படத்தின் வசூல் நிலவரங்கள்

விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது. தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, 7 வாரங்கள் கடந்தும், இப்போது வரை சுமார் 110 திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வருகிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் எதுவுமே கூறாமல் இருந்தார். முதன்முறையாக 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் 'விஸ்வாசம்' படத்தின் வெற்றி, வசூல் நிலவரங்கள் குறித்து கூறியிருப்பதாவது: இந்தப் படம்தான் எனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்தது. இத்திரைப்படம்…

நேராக முதல்வர் நாற்காலிதானா? சீமான்

'அமீரா' படத்துவக்க விழாவில் பேசும் போது, மக்களவைத் தேர்தலிலிருந்து ஒதுங்கியதற்கு ரஜினியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் சீமான். சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் 'அமீரா'. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகியாக மலையாளத்தில் முன்னணி நாயகியாக இருக்கும் அனு சித்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். சீமானிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இரா.சுப்ரமணியன் இயக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். செழியன் ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகரும் பணிபுரியவுள்ளனர். சென்னையில் நடைபெற்ற 'அமீரா' படப்பூஜையில் படக்குழுவினருடன் கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் அமீர், மீரா கதிரவன், ஜெகன்னாத், ’டோரா’ தாஸ், கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் பேசியதாவது: ''இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப்…

தேர்தலை மையமாக வைத்து எல்.கே.ஜி.

திரைப்படம் : எல்.கே.ஜி நடிகர்கள் : ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், மயில்சாமி, ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கதை, திரைக்கதை, வசனம் : ஆர்.ஜே. பாலாஜி இசை : லியேன் ஜேம்ஸ் இயக்கம் : கே.ஆர். பிரபு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலை, தேர்தலை மையமாக வைத்து அல்லது கேலி செய்து படங்கள் வருவது ரொம்பவும் குறைந்துபோயிருக்கும் சூழலில் வெளியாகியிருக்கிறது எல்.கே.ஜி. சாதாரண மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் ஓர் இளைஞன் என்னென்ன தகிடுதத்தங்களைச் செய்து முதலமைச்சராகிறான் என்பதுதான் படத்தின் "ஒன்லைன்". லால்குடி கருப்பைய்யா காந்தி (ஆர்.ஜே. பாலாஜி) ஒரு மாநகராட்சி உறுப்பினர். தன் தந்தையைப் (நாஞ்சில் சம்பத்) போல தோற்றுப்போன அரசியல்வாதியாகிவிடக்கூடாது என்பதற்காக சிறு வயதிலேயே மிகப் பெரிய லட்சியங்களுடன் செயல்பட்டு வருபவர். அந்தத் தருணத்தில் தமிழகத்தின் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அதற்குப்…

இலங்கை அரசியல்வாதிகளின் போதைப்பொருள் பயன்பாடு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவினால், ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, ரஞ்ஜன் ராமநாயக்க, கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை குறித்த குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார். இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக விசாரணை குழுவின் தலைவர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விசாரணைகள் தொடர்பான தகவல்களை தற்போதை நிலைமையில் வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31…

தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம்

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம் என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்ட ஜெ. பேரவை சார்பில், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தல் ஆகியவற் றில் அதிமுக வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜெ. பேரவைச் செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், எம்.பி கோபால், எம்எல்ஏக்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்த அரசுக்கு நன்றி தெரிவிப்பது,…

நாடு முழுவதும் 3711 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.