கருத்தரிப்பு நிபுணர் கீதா கொழும்பு வருகிறார்

உலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். குழந்தைப்பேறின்றி வாடுபவர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு இவர் கொழும்பு வருகின்றார். குழந்தைப் பேறின்றியிருந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தம்பதியரின் வாழ்வில் புத்தொளி ஏற்றியவர் டொக்டர் கீதா ஹரிப்ரியா.சர்வதேச அளவில் கடந்த 35 ஆண்டுகளில் சிகிச்சையளித்து 35,000பேருக்கு குழந்தைபிரசவத்தைப் பெற்றுக்கொடுத்தவர்.

செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகள்

உலகளவில் 60சதவீதமே வெற்றியளிக்கிறது. ஆனால் பிரஷாந்த் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சைகள் 85சதவீதம் வெற்றிய ளிப்பதாகத் தகவல்கள் நிரூபித்துள்ளன. உயரிய தொழில்நுட்பம், உலகத் தரத்திலான மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை ஆகியனவே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது.

உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் செயன் முறைக் கருத்தரிப்பு தொழில் நுட்பங்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் அறிமு கப்படுத்திய பெருமை பிரஷாந்த் மருத்துவமனையைச்சாரும். ‘எம்ப்ரியோஸ்கோப்’ (Embryoscope), ‘எம்ப்ரியோ க்ளுா’ (Embryo Glue),

முந்தைய இன்கியூபேட்டர்களில், சினைகள் சரியாக வளர்கின்றனவா என்பதைப் அறிவதற்காக, இன்கியுபேட்டரிலிருந்து வெளியே எடுத்துப் பார்க்கவேண்டியிருந்தன. இதனால் திடீரென புறச் சூழல் மாறி, பல சினைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகின. எம்ப்ரியோஸ்கோப்பின் வருகையோடு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது.

எம்ப்ரியோஸ்கோப்பினுள் வைக்கப்படும் கருச்சினைகள், அந்த உபகரணத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிப்பதிவுக் கருவி மூலம் சீரான இடைவெளியில் படம் பிடிக்கப் படுகின்றன. இதை கணினி மூலம் வெளியே இருந்து பார்க்க முடியும். இதனால், சீராக வளரும் சினைகளை அடையாளம் கண்டு அவற்றை மட்டுமே கருப்பையில் பதியம் செய்ய முடிவதால், கருத்தரிப்பு ஏறக்குறைய உறுதியாகிவிடுகிறது.

தொடர் கருச்சிதைவுகளுக்கு முகங்கொடுத்த பெண்களுக்கு கருச்சினை மாற்றம் நடை பெறும் சமயத்தில்,எம்ப்ரியோ “க்ளு” என்ற இந்தப் பசையை கருச்சினையில் தடவி பதியம் செய்துவிடுகிறார் நிபுணர் ஹரிப்பிரியா.இதனால், சினையானது கருப்பைச் சுவற்றை நன்கு பிடித்துக்கொண்டு வளர்வதால் குழந்தைப் பேறு உறுதி செய்யப்படுகிறது.

மடிகணினி பாவனை, இறுக்கமான ஆடைகள், ஒவ்வாத உணவு வகைகள், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, போதிய ஓய்வின்மை, மன அழுத்தம், பணிச்சுமை, புகைபிடித்தல் போன்ற காரணங்கள் ஆண்கள் பலரையும்,ஆரோக்கியமற்றவர்களாக்கி குழந்தைப் பாக்கியமற்றவராக்குகிறது

சிகிச்சைகளுக்காக பிரஷாந்த் மருத்துவமனை க்குச் செல்லும் தம்பதியருக்கு இருவழி விமானச் சீட்டுக் கட்டணத்தை மருத்துவமனையே பொறுப்பேற்கின்றது. தங்குமிடம், போக்கு வரத்து வசதிகளும் இலவாசமாக வழங்கப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காகச் செலவிடவேண்டிய கட்டணத்தில் கணிசமான தொகையை, மீதப் படுத்தவும் முடிகிறது.எனவே குழந்தைப் பேறின்றி,கவலையில் வாடும் தம்பதியர்,

டொக்டர் கீதா ஹரிப்ரியாவை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில், கொழும்பு, பி.எம்.ஐ.சி.எச். மண்டபத்தில் சந்திக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு என்பதை மறவாதீர்கள்!தொடர்புகளுக்கு: இல.21, /பிரேசர் அவனியூ, தெஹிவளை. தொலைபேசி இலக்கம்: 0112 730987 / 075 4000012.

Related posts