அலைகள் மதிய செய்திகள் வல்லரசுகளின் விண்வெளி போர் ஒரு சிறப்புப் பார்வை

கிடைத்தற்கரிய தகவல்களுடன் காண்பதற்கரிய காட்சிகளுடன் கலந்து சுவைபட தரப்படுகிறது. அலைகள் 22.02.2019 வெள்ளி

டென்மார்க் கேர்னிங் முதியோர் இல்லத்திலிருந்து காணொளி

முதியோர்களின் நாடாகிறது டென்மார்க்.. பாடசாலைகள் போல முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன.. அரிய தகவல்களை அள்ளி வழங்கியபடி, கண்கவர் காட்சிகளுடன் தரிசனமாகும் காலை நேரம்.. முதியோர்களின் எதிர்காலம் என்ன..? அலைகள் 22.02.2019

தகுதியும், தரமும் நிறைந்த டுலெட் ?

வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல் என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த…

கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி

தென்கொரியாவில் இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு 'சியோல் அமைதிப் பரிசு' அறிவிக்கப்பட்டது. ''ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது'' என்று கொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் சியோல் அமைதிப் பரிசைப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) தென் கொரிய தலைநகர் சியோல் சென்றார். அங்கு யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ' சியோல் அமைதிப்…

விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி

அரசியல் குறித்து துளியும் பேசவில்லை என, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த பிறகு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாக முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார். விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைப் பார்க்க வந்த முதல் நபர் விஜயகாந்த் தான். சிங்கப்பூரிலிருந்து வந்த பிறகும் தொலைபேசியில் என்…

வவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வோகஷ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 75,000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சுற்றி வளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் வவுனியா,மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் மனோஹராவின் நெறிப்படுத்தலில் விஷேட…

வன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காங்கேசன்துறை, பலாலி, மானிப்பாய், பிறவுண் மற்றும் பருத்தித்துறை வீதிகளிலும் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசங்களை அடக்குவதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தனர். இதற்காக வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையில் வாள்வெட்டு,குழு மோதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில்…

13 வருட கட்டாயக் கல்வி பிரகடனம்

நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தூரநோக்குடனேயே அரசாங்கம் 13 வருட கட்டாயக் கல்வியை பிரகடனப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனித வளத்தை மேம்படுத்துவதனூடாக உலகத்துடன் போட்டியிடக்கூடிய வல்லமையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். நவீன கல்வி புரட்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இந்த வைபவம் இடம்பெற்றது. பிரதமர் இங்கு தொடர்ந்து பேசுகையில்:- 21ஆம் நூற்றாண்டின் கல்வித் தேவைகள் துரிதமாக மாற்றமடைந்து நவீனமடைந்து வருகின்றன. இந்த உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடியதான நவீன எதிரகால பிரஜைகளை உருவாக்குவது இன்று கல்வித்துறை எதிர்நோக்கும் பெரும் சவாலாகும். பாடசாலைகளில் சேரும் பிள்ளைகளுக்கு சரியான கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சரியான கல்வி…

கருத்தரிப்பு நிபுணர் கீதா கொழும்பு வருகிறார்

உலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். குழந்தைப்பேறின்றி வாடுபவர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு இவர் கொழும்பு வருகின்றார். குழந்தைப் பேறின்றியிருந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தம்பதியரின் வாழ்வில் புத்தொளி ஏற்றியவர் டொக்டர் கீதா ஹரிப்ரியா.சர்வதேச அளவில் கடந்த 35 ஆண்டுகளில் சிகிச்சையளித்து 35,000பேருக்கு குழந்தைபிரசவத்தைப் பெற்றுக்கொடுத்தவர். செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகள் உலகளவில் 60சதவீதமே வெற்றியளிக்கிறது. ஆனால் பிரஷாந்த் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சைகள் 85சதவீதம் வெற்றிய ளிப்பதாகத் தகவல்கள் நிரூபித்துள்ளன. உயரிய தொழில்நுட்பம், உலகத் தரத்திலான மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை ஆகியனவே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் செயன் முறைக் கருத்தரிப்பு தொழில் நுட்பங்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் அறிமு கப்படுத்திய பெருமை பிரஷாந்த் மருத்துவமனையைச்சாரும். ‘எம்ப்ரியோஸ்கோப்’ (Embryoscope), ‘எம்ப்ரியோ க்ளுா’ (Embryo Glue), முந்தைய இன்கியூபேட்டர்களில், சினைகள்…