சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்

நடிகை அமலாபால் நடித்த முதல்படமான ‘சிந்து சமவெளி’ கடும் சர்ச்சையில் தொடங்கினாலும் அடுத்து அவர் நடித்த ‘மைனா’ சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்கவில்லையென்றாலும் கணிசமான படங்களில் நடித்து வந்தார். பின்னர் தலைவா படத்தில் விஜய், தெய்வ மகள் படத்தில் விக்ரம், வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார்.

இதற்கிடையில் அவர் இயக்குனர் விஜய்யை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதுடன், ஆடை உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். அமலாபால் 2வது திருமணம் செய்ய தயாராகி வருவதாக அவ்வப்போது கிசுகிசு வெளியாகிறது. அதற்கு பதில் அளித்தவர், ‘எனது முதல் திருமணம் என் இஷ்டத்துக்குத் தான் நடந்தது.

அது சரியாக அமையவில்லை. எனவே, எனது 2வது திருமணம்பற்றிய முடிவை என் பெற்றோரிடம் விட்டுவிடுவேன்’ என்றார். திரைப்படங்களில் நடிக்கும் நேரம் தவிர மற்ற ஓய்வு நேரங்களில் வெளிநாடுகளுக்கு தோழிகளுடன் செல்லும் அமலாபால் வீட்டிலிருக்கும்போது தான் வளர்க்கும் செல்லப் பிராணி வின்டர் உடன் விளையாடி பொழுதை கழிக்கிறார்.

படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்கு சென்றால் வின்டர் நாய்க்குட்டியின் ஞாபகமாகவே இருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருக்கும் அவர், தனது வின்டர் நாய்குட்டியை ரொம்பவும் மிஸ் செய்வதாக தெரிவித்திருப்பதுடன், ‘சுயநலம் நிறைந்த உலகில் சுயநலமில்லாமல் எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழமுடியும் என்பதை சுயநலவாதிகளுக்கு இந்த நாய்க்குட்டி பாடம் கற்றுத்தரும்’ என மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
Tags:

Related posts