சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்

நடிகை அமலாபால் நடித்த முதல்படமான ‘சிந்து சமவெளி’ கடும் சர்ச்சையில் தொடங்கினாலும் அடுத்து அவர் நடித்த ‘மைனா’ சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்கவில்லையென்றாலும் கணிசமான படங்களில் நடித்து வந்தார். பின்னர் தலைவா படத்தில் விஜய், தெய்வ மகள் படத்தில் விக்ரம், வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். இதற்கிடையில் அவர் இயக்குனர் விஜய்யை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதுடன், ஆடை உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். அமலாபால் 2வது திருமணம் செய்ய தயாராகி வருவதாக அவ்வப்போது கிசுகிசு வெளியாகிறது. அதற்கு பதில் அளித்தவர், ‘எனது முதல் திருமணம் என் இஷ்டத்துக்குத் தான் நடந்தது. அது சரியாக அமையவில்லை. எனவே, எனது 2வது திருமணம்பற்றிய முடிவை…

சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்

காதல் காட்சியில் கண்ணடித்து நடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் ஒரு வருட தாமதத்துக்கு பிறகு ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் பிரியா ரசிகர்களுக்கும், தனக்கு ஆதரவு தெரிவித்த நெட்டிஸன்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்ச்சையாக இருக்கும் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பது பற்றிய கேள்விக்கு மனதில் பட்டதை மறைக்காமல் பேசி மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கி உள்ளார் பிரியா வாரியர். அவர் கூறும்போது, ‘இதில் அர்த்தம் எதுவும் இல்லை. அந்த பிரச்னைபற்றி பெரிதாக நான் எடுக்கமாட்டேன். சம உரிமைக்கு போராட விரும்பினால், அதற்கு நாம் மிகவும் பின்னோக்கி செல்ல வேண்டும், சபரிமலையில் முன்னுரிமை என்ன என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அது பல்லாண்டுகளாக நடைமுறையிலும் உள்ளது. ஒரு பக்தர் 41 நாட்கள் விரதம் இருக்கிறார்,…

கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்?

தெலுங்கில் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்), தமிழில் சர்கார் படங்களுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் கேட்டும் அவருக்கு பிடித்த மாதிரியான சப்ஜெக்ட் எதுவும் அமையவில்லை என்பதால் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். தெலுங்கு இயக்குநர் நரேந்திரநாத் சொன்ன ஒரு கதை, அவரை மறுக்க முடியாத அளவுக்கு இம்பிரஸ் செய்துவிட்டதாம். ஹீரோயின் ஓரியண்டடான இந்தக் கதையில் நடிக்க உடனே கீர்த்தி சம்மதித்திருக்கிறார். தான் நடிக்க அவர் ஒரே ஒரு நிபந்தனை மட்டும்தான் விதித்தாராம். “இந்தப் படத்தை மகாநடி மாதிரி தெலுங்கு, தமிழ் இருமொழிகளிலும் வெளியிட வேண்டும். தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொள்ள, உடனே மேக்கப் போட்டுக் கொண்டு ஷூட்டிங்குக்கு கிளம்பிவிட்டார் கீர்த்தி. படத்தில் ஹீரோ என்று யாரும் சொல்லிக்கொள்ளும்படி இருக்க மாட்டார்களாம். அனேகமாக…

சவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி

இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, அரசு நடைமுறைகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்று அழைத்து வந்தார். புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மூன்று நாள் தாமதமாக சவுதி இளவரசர் பின் சல்மான் பாகிஸ்தான் சென்றார். சவுதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டில் வழக்கமாக பின்பற்றப்படும் அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு விமான நிலையத்தில் இருந்து தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார். இதைத்தொடர்ந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்…

ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை

ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருப்பது ஊடக சுதந்திரம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்ட வேளை சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அறிய முடிகின்றது. பொலிஸாரின் இச் செயற்பாடு தொடர்பில் மாநகர முதல்வர் என்ற வகையிலும், மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் எனது…

மறப்போம், மன்னிப்போம் என்பது வேடிக்கையானது

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத அரசாங்கம் தற்போது இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது. பிரதமரின் இக்கூற்றை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என பிரதமர் கூறிய போது அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மௌனமாக இருந்துவிட்டு இப்போது மக்கள் முன் நாடகமாடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற…