சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் மகள்..

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குநர்கள் ரவிக்குமார் மற்றும் பி.எஸ். மித்ரன் ஆகியோர் இயக்கும் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருக்கிறார். இதில் பி.எஸ். மித்ரன் இயக்கும் படம் எஸ்.கே. 15 ஆகும்.

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம், அரசியல் கலந்த த்ரில்லரை களமாக கொண்டிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதன் அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தமிழில் வான் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts