உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி முன்னோக்கி செல்

அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தென்னிலங்கைக்கான கொன்சியூலர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (15) மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி அலுவலகத்தை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன திறந்து வைத்தார்.

இந்த கொன்சியுலர் அலுவலகத்திற்கு நவீன டிஜிட்டல் சேவை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இளைஞர் யுவதிகள் எதிர்காலத்தில் சேவையை பெற்றுக்கொள்ள கொழும்புக்கு செல்லவேண்டியதில்லை எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கொழும்பிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்கு சென்று பலசிரமங்களுக்கு மத்தியில் சேவைகளை பெற்று வந்தனர். இன்றுடன் அச்சிரமம் முடிவடைகின்றது.

கொன்சியுலர் சேவையின் முதலாவது பிராந்திய அலுவலகம் யாழ்பாணத்திலும் இரண்டாவது அலுவலகம் இன்று மாத்தறையில் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் தென்னிலங்கை மக்கள் அதிக நன்மையை பெறவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த வருட வரவு-செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கவுள்ளோம். விசேடமாக பெண்களுக்கு சுயதொழில் அபிவிருத்திகளை உள்ளடக்கிய பல சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts