விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர் என்று அஜித்

விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர் என்று அஜித் புகழ்ந்ததாக நடிகர் ரமேஷ் திலக் கூறியுள்ளார்.

விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் பெரியவர்கள் என்று ஒருபுறம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றுமொரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர்.

நான் ஒன்றைக் கூறுகிறேன். ஆனால் நம்ப மாட்டீர்கள். ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது.

அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்” என்றார் ரமேஷ் திலக்.

Related posts