அலைகள் வாராந்தப் பழமொழிகள் 16.02.2019 சனிக்கிழமை

01. வெற்றி என்பது மூளையின் அளவை கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல சிந்தனையின் அளவைப் பொறுத்தே தீர்மானமாகிறது. 02. பிரமாண்டமாக சிந்தியுங்கள் அதை வைத்தே உங்கள் வங்கிக் கணக்கும், மகிழ்ச்சியும் தீர்மானிக்கப்படுகிறது. 03. நாம் எல்லோருமே நம்மை சுற்றியிருக்கிற சிந்தனையின் விளைவுகளே. நம்மை சுற்றியுள்ள சிந்தனைகள் மிகவும் சிறிதாக இருப்பதாலேயே நம்மால் முன்னேற முடியாதிருக்கிறது என்பதை உணருங்கள். 04. மனிதர்களின் மனதில் ஊட்டப்பட்ட சிறுபராய அச்சமே பாதுகாப்பெனக் கருதி, குறுகிய சிந்தனைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. உங்களை முன்னேற விடாமல் முடக்கி வைத்திருப்பதும் அதுதான். ( மாமனை மணமுடித்தால் பாதுகாப்பு என்று எண்ணும் அறியாமை ) 05. நம்மிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குறுகிய சிந்தனைகளுக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இதனால் நேர்மையாக வழிகாட்ட எவருமின்றி முன்னேற்றம் நூற்றாண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. ஆகவே நீங்களே தலைமைதாங்க தயாராகுங்கள். 06. வெற்றிக்கு நீங்கள்…

பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர் பாகிஸ்தான் : மோடி

பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர் பாகிஸ்தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மோடி பேசியதாவது: பிரிவினைக்கு பின்னர் உருவான பாகிஸ்தான், பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது திவாலாகும் நிலையில் இருக்கும் அந்த நாடு பயங்கரவாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின் கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர் என்று அஜித்

விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர் என்று அஜித் புகழ்ந்ததாக நடிகர் ரமேஷ் திலக் கூறியுள்ளார். விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் பெரியவர்கள் என்று ஒருபுறம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றுமொரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர். நான் ஒன்றைக் கூறுகிறேன். ஆனால் நம்ப மாட்டீர்கள். 'விஸ்வாசம்' ஷூட்டிங்கின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய்…

போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ’ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ?’ "ராணுவ வீரர்கள் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை அவர்கள் மனிதாபிமானப் போரையே நடத்தினர் என்று இதுவரை இலங்கை அரசு கூறிவந்தது. எனினும் முதன்முறையாக நாட்டின் பிரதமர் ராணுவத்தினரும் போர்க்குற்றங்களையிழைத்தனர் என்ற உண்மையை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள…

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் உள்ளதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதனிடையே, அவர் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதால், அவரது மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியப் பிரச்சினைகளில் கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபடியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமண நாளைக் கொண்டாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின. இந்நிலையில்,…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 07

உங்கள் தவறுகளை அங்கீகரியுங்கள். (புரிஞ்சுகொள்ள முடியாத உண்மை) சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். நீதிமொழி 9:9. ( வச. 1-10) சில வருடங்களுக்குமுன் புற்றுநோய் ஆராட்சியாளர் டாக்டர். ராபர்ட் குட் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்றை பத்திரிகையில் வாசித்தேன். அவருடைய சிறந்த குணாதிச யங்களைக் குறித்து மிகவும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. அவர் புதிய கருத்துக் களையுடையவர் என்றும், தனக்கு அளிக்கப்படும் எந்தச் செய்திகளையும் பயன் படுத்தும்; திறமை படைத்தவர் என்றும் அந்த கட்டுரை விபரித்தது. என்றாலும் அவரைக் குறித்து அளிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட செய்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவரின் ஆய்வுரைகளில் ஒருதவறு கண்டுபிடிக்கப்படும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு, அதை உடனடியாக சரிசெய்வதாக அக்கட்டுரையில் எழுதப்பட் டிருந்தது.…

எம்மை பொறுத்த வரை எல்லாம் திருட்டுகும்பல் : மனோ

பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் புலிகள் காலத்தில் இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது. அப்படியானால் புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்று கேட்க விரும்புகின்றேன் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 வீதமாக இருக்கலாம் ஆனால் அது 100 வீதமாக மாறமுடியாது. 75 உடன் 25 இணைந்தால் தான் 100 வீதமாகமுடியும். அது தான் இலங்கை நாடாக இருக்கமுடியும். இதனை அனைவரும்…

யாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம்

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகர சபையின் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான நிதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு 3நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் நேற்றுமுன்தினம் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டத்தில் கலந்துகொண்டார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் இந்தத் திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கினார். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நவீன நகரத் திட்டம் சிறந்த திட்டம். அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்தக் கூட்டத்திலேயே இணக்கம் தெரிவித்தார். கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாணம், செம்மணி…

தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவை

தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும், காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும் நடாத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்ளுவதுடன் மன்னார் யாழ்ப்பாணம் ஒரு சுற்றுலா மையமாக அமைய இருக்கின்றது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம் இந்த நாட்டிலே ஒரு முக்கியமான பிரதேசம். யுத்தத்துக்கு பிற்பாடு வடக்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தெற்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக கப்பல் துறையை அபிவிருத்தி செய்கின்றோம். இத் துறையையும் தொழில் துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றோம். இதற்காக நாங்கள் அதிகமான பணங்களை செலவிட்டு வருகின்றோம்.…