உலக தமிழ் சங்கம் மதுரையின் இலக்கிய விருது பெறுகிறார் டென்மார்க் ஜீவகுமாரன்

இந்த விருது வெளிநாடுகளை சேர்ந்த மூவருக்கு வழங்கப்படுவதாகும். முதல்வர் பழனிச்சாமியின் கையால் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் ஜீவகுமாரன் சற்று முன் தொலைபேசி மூலம் தகவலை வழங்கினார்.

அவசரமாக தமிழ்நாடு புறப்படுகிறார்.. இது குறித்து அவருடைய முகநூலில் உள்ள தகவல் தரப்படுகிறது.. சென்று வருக வென்று வருக என்று வாழ்த்துகிறோம்.

————-

என்ன தவம் செய்தேன்.

இதற்கு மேல் எனக்கும் என் மூலம் புலம் பெயர் இலக்கியத்திற்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்வில்லை!

மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் 2018ம் ஆண்டிற்கான இலக்கிய விருது எனக்கு கிடைத்திருக்கின்றது.

நிகழ்ச்சி : முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் வரும் செவ்வாய் 19-02-2019 நடைபெறவுள்ளது.

வழமை போல் இந்த விருதை என் கைகளினால் வாங்கி அதனை என் தோளிகளிலோ அல்லது தலையிலோ வைத்துக் கொண்டாடாமல் என் எழுத்துப் பணி தொடரும்.

நிச்சயமாய் இது எனக்கு பெரிய பொறுப்பை தந்திருக்கு என்பதனை மட்டும் உணர்கின்றேன்.

அன்புடன்
வி. ஜீவகுமாரன்

Related posts