தாயகத்தில் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்.

நேற்று கிளிநொச்சியில் முக்கியமான பாடசாலைகளில் உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ரியூப் தமிழ் புத்தக சந்தை சார்பில் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த நூல் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது ரியூப்தமிழ் இளைஞர்கள் இளம் தமிழன் ராம்கி தலைமையில் கிளிநொச்சி வரை எட்டித் தொட்டுள்ளனர். நீர்கொழும்பில் ஆரம்பித்து பொத்துவில்வரை செல்லும் நெடிய யாத்திரை இது. இந்த நூல் மாணவரிடையே இன்று பெரிய மதிப்பு பெற்றுள்ளது. பாடசாலை பாடங்களை படித்து சோர்வடைந்தால் உடனடியாக இந்த தன்னம்பிக்கை நூலை கையில் எடுத்து வாசித்து புத்தெழுச்சி பெறுவதாக மாணவி ஒருவர் கூறுகிறார். தமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை தருவதாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். தொடர்கிறது நமது பணி என்கிறார்கள் தாயக இளையோர். அலைகள் 12.02.2019

உலக தமிழ் சங்கம் மதுரையின் இலக்கிய விருது பெறுகிறார் டென்மார்க் ஜீவகுமாரன்

இந்த விருது வெளிநாடுகளை சேர்ந்த மூவருக்கு வழங்கப்படுவதாகும். முதல்வர் பழனிச்சாமியின் கையால் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் ஜீவகுமாரன் சற்று முன் தொலைபேசி மூலம் தகவலை வழங்கினார். அவசரமாக தமிழ்நாடு புறப்படுகிறார்.. இது குறித்து அவருடைய முகநூலில் உள்ள தகவல் தரப்படுகிறது.. சென்று வருக வென்று வருக என்று வாழ்த்துகிறோம். ------------- என்ன தவம் செய்தேன். இதற்கு மேல் எனக்கும் என் மூலம் புலம் பெயர் இலக்கியத்திற்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்வில்லை! மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் 2018ம் ஆண்டிற்கான இலக்கிய விருது எனக்கு கிடைத்திருக்கின்றது. நிகழ்ச்சி : முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் வரும் செவ்வாய் 19-02-2019 நடைபெறவுள்ளது. வழமை போல் இந்த விருதை என் கைகளினால் வாங்கி அதனை என் தோளிகளிலோ அல்லது தலையிலோ வைத்துக் கொண்டாடாமல் என் எழுத்துப் பணி…

அலைகள் உலகச் செய்திகள் 12.02.2019 செவ்வாய் காலை

இன்று கற்றலோனியா சுதந்திர போராட்டக்காரர் மீது வழக்கு ஆரம்பம்.. தனிநாடு கேட்டவர்களுக்கு 25 வருட சிறை அபாயம்.. சதிப்புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க எத்தனித்த குற்றத்தில் 1200 பேர்வரை கைது செய்ய துருக்கிய அதிபர் உத்தரவு.. அமெரிக்க அதிபருக்கு சுவர் கட்டாவிட்டாலும் வேலி போட அனுமதி.. உலக அரங்கில் இன்று உருவாகியிருக்கும்.. மூன்று முக்கிய சுதந்திர மறுப்பு செய்திகளை முடிந்து கட்டப்பட்ட உலக வலம்.. அழகிய காட்சிகளுடன் யுனிக்காக வழங்கப்படும் புதுமைச் செய்திகள்.. சர்வதேச அளவில் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு..புலம் பெயர் இளையோர் இதயங்களை கவர்ந்த தமிழ் செய்தி.. பழமைகளை உடைத்து புது பரிணாமம் பெறுவோம்..! அலைகள் 12.02.2019