கண்ணை மூடியிருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வெக்கல

நடிப்பை காட்டி கவரும் நடிகைகளுக்கு மத்தியில் கவர்ச்சியால் திணறடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஹீரோயின்களும் வலம் வருகின்றனர். அதில் கவர்ச்சி ஹீரோயினாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. தமிழில் ஹீரோயின், 2வது கதாநாயகி, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என வெரைட்டியாக நடித்து வந்த ராய்லட்சுமிக்கு திடீரென்று பாலிவுட் மோகம் ஏற்பட இந்தி படங்களில் கவனத்தை திருப்பினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அகிரா இந்தி படத்தில் சிறுவேடத்தில் நடித்தவருக்கு ஜூலி 2 இந்தி படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடிவு செய்தவர் டாப்லெஸ், கவர்ச்சி காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டினார். இப்படம் தன்னை இந்தியில் பிரபல நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்க வைக்கும் என்று எண்ணிய நிலையில் படம் வெளியாகி தோல்வி அடைந்ததால் அப்செட் ஆனார்.

புதிதாக இந்தி பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் தென்னிந்திய படங்களுக்கு திரும்பினார் ராய் லட்சுமி. நீயா 2ம் பாகத்தில் இச்சாதாரி பாம்பாக வேடம் ஏற்று நடித்து வருகிறார் ராய் லட்சுமி. அத்துடன் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இப்படங்கள் வெளியாகும்போதுதான் ராய் லட்சுமியின் அடுத்த கட்ட வாய்ப்புகள் பற்றி தெரியவரும். இதற்கிடையில் தன்னைபற்றிய பேச்சு குறைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

இணைய தள பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடையுடன் தனது படங்களை வெளியிட்டு கவர்கிறார். தற்போது ஜிம்மில் இறுக்கமான உடை அணிந்து பயிற்சி செய்யும் கிக்கான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். கண்ணை மூடிக்கொண்டு ராய்லட்சுமி உடற்பயிற்சி செய்கிறாரா? தியானம் செய்கிறாரா என சில ரசிகர்கள் கலாய்த்தாலும், கண்ணை மூடிக்கொண்டாலும் எங்கள் கண்களுக்கு கவர்ச்சிக்கு பஞ்சம் வெக்கல… ஓகே ஓகே… எனவும் சில ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

Related posts