காமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும்

கல்யாண் இயக்கும் பெயரிடப்படாத புதிய காமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் இணைந்து நடிக்கின்றனர்.

’36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ , ‘நாச்சியார்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘ குலேபகாவலி’ கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘ குலேபகாவலி’ படத்தின் மூலம் தனித்தடம் பதித்த நடிகை ரேவதி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.

2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த காமெடிப் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஆசிரியையாக நடித்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts