ரியூப் தமிழ் புத்தக சந்தைக்காக டென்மார்க் சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஒரு பேட்டி..

பேட்டியளித்தவர் டென்மார்க் ஓகூஸ் நகரில் வாழும் ஆசிரியர் திரு.க.கருணாகரா.. பேட்டி கண்டவர் கி.செ.துரை பின்னணி இசை வழங்குவது நிசான் கார்.. காரும் நம்மோடு சேர்ந்தியங்கும் முதல் பேட்டி.. அலைகள் 10.02.2019

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு!

இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். நாளை ரஜினி இல்லத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ரஜினி. தனது நண்பரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரஜினி நேரில் அழைப்பு விடுத்தார். அந்த வரிசையில், தற்போது தமிழக…

எனது வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் ?

தனது வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் என்பது குறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் பிப்ரவரி 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொந்தபந்தங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கு நடிகர் ரஜினி அழைப்பிதம் கொடுத்து வருகிறார். இன்று காலை கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைவதில் ஒரு தந்தையாக மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் தனது திருமணம் குறித்து சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "வார்த்தைகளை கடந்து நான் ஆசிர்வதிக்கப்பபட்டிருக்கிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள். எனது டார்லிங் தந்தை. எனது தேவதை மகன். தற்போது என்னுடைய விசாகன்", என அவர்…

காமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும்

கல்யாண் இயக்கும் பெயரிடப்படாத புதிய காமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் இணைந்து நடிக்கின்றனர். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' , 'நாச்சியார்', 'செக்கச்சிவந்த வானம்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ' குலேபகாவலி' கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ' குலேபகாவலி' படத்தின் மூலம் தனித்தடம் பதித்த நடிகை ரேவதி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த காமெடிப் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர்…

இளையராஜா 75 நான் நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பமில்லை

இளையராஜா 75’ நிகழ்ச்சியைத் தான் முன்னின்று நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பம் இல்லை எனவும், அதனால்தான் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 2 நாட்கள் நிகழ்ச்சி கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, கடந்த வருடத்தில் இருந்தே திட்டமிட்டு வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக, துணைத்தலைவராக இருந்த இயக்குநர் கெளதம் மேனனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகப் பார்த்திபனை துணைத்தலைவராக நியமித்தனர். டிசம்பர் 24-ம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதை அறிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக பல வேலைகளைச் செய்தார் பார்த்திபன். குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தது அவர்தான். இப்படியிருக்கையில், நிகழ்ச்சி நடைபெற்ற ஓரிரு நாட்களுக்கு…

இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க…

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை இலங்கை அரசாங்கம் கூற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறும், கைகளில் எதிர்ப்பு பதாகைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சனை மட்டுமல்ல மாறாக இது ஓர் இனத்துக்கான பிரச்சனை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளுக்காக நீதியும் நியாயமுமான பதிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள…

தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகை கொள்ளை

யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடொன்றிலையே நேற்று சனிக்கிழமை (9) அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்தியைக் காண்பித்து மிரட்டி வீட்டினை சல்லடை போட்டு தேடியுள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த…

த. தே. கூ. அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. அது பதவிகளைப்பெற தோள் கொடுகவில்லை. அவர்களது கொள்கையும், வேண்டுகோளும், அரசியலமைப்பாகும். அவர்கள் கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறாதவர்கள் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன்தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பாரிய அபிவிருத்திப்ணிகள் நேற்று (9) கல்வி ராஜாங்க அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டு - களுதாவளையில் நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளில் பிரதானமாக களுதாவளை மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது. அப்பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடத்தொகுதிக்கும், உள்ளக விளையாட்டரங்குக்கும் அவரால் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டதோடு, 850 மீட்டர் நீளமான களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கான காப்பற் வீதியும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்தின் பாரதி, விபுலானந்தர், நாவலர் ஆகிய இல்லங்களுக்கைிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி…

வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 05 (10.02.2019)

மன அழுத்தம் ( Stress) ஒரு சின்ன விடயமல்ல அது சுகயீனம் பொதுவாக "ஸ்ரெஸ்" என்ற ஒரு சொல் ஐரோப்பிய மொழிகளில் அதிகம் பேசப்படுகிறது. இந்த சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன.. "மன அழுத்தம்" என்று கூறுகிறோம். ஆனால் ஐரோப்பிய மொழிகளில் ஸ்ரெஸ் என்ற சொல்லுக்குள்ள வலுவும், வரலாறும், கனதியும் நம் தமிழ் சொல்லில் உள்ள மன அழுத்தத்தைவிட மிக மிக சீரியஸ் ஆனது. ஐரோப்பாவின் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அனிற்றா கோல்ட்மான் மன அழுத்தம் பற்றி பின்வருமாறு கூறுகிறார். " நாம் ஸ்ரெஸ் என்ற விடயத்தை நீண்ட காலத்திற்கு ஓர் எச்சரிக்கை போல பார்த்துவிட்டு, அப்படியே வாழ்ந்துவிட முடியாது. ஏனென்றால் இது சாதாரணமாக வந்து மறையும் எச்சரிக்கையல்ல.. ஓர் ஆபத்தான நோயாகும்." நாம் கட்டிய சமுதாயப் பொறிக்கிடங்கில் இப்போது நாமே சிக்குண்டுவிட்டோம் இதுவே நமது…