அமெரிக்காவுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஈரான் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர்”சிரியாவின் 90% பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அமெரிக்கா இதனை செய்கிறார்களோ, மறுக்கிறார்களோ. நீங்கள் சிரியாவிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘‘ஈரான் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில் சிரியாவில் நிலைப்புத்தன்மை மற்றும் முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்துவதுதான் முக்கிய இலக்கு. சிரியா பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சிரிய மக்கள் அவர்களது வாழ்க்கையை வாழ வேண்டும்’’ ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள்.

சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரியா போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக்கட்டப் போர் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

Related posts