யாழ். எழுத்தாளர் சாந்தனுக்கு இந்திய அரசின் விருது..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் பிரேம் சந்த் பெலோஷிப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதிய எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தனை 2017ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் விருது பெற்றமைக்காக டெல்லி தமிழ்ச் சங்கம் தனது உயரிய பாராட்டையும் கவுரவத்தையும் அவருக்கு வழங்கியது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 02.02.2019 முன்னாள் இந்திய துணை தூதர் இந்திய மத்திய உள்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா துறையின் இயக்குனர் ஆ. நடராஜன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் மொழிபெயர்ப்பிலும், மேலைத்தேய எழுத்தாளர்களை தமிழில் அறிமுகம் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார்.

அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தலைமை தாங்கிய முன்னாள் யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆர் நடராஜன் கருத்துரைக்கும் பொழுது, ” ஒரு கிராமத்தில் பிறந்த எழுத்தாளன் தன்னுடைய முகவரியை தேடத் தொடங்கினான், அவன் முகவரி புலப்படவில்லை மேலும் மேலும் நூல்களை எழுதுகிறான். இப்படி அவன் நூல்களை எழுதி ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் தான் நினைத்த இடத்தை அடைகிறான்..! அந்த இடத்தை அடைந்த அவன் வேறு யாருமில்லை எழுத்தாளர் அய்யாதுரை சாந்தன்தான் என்று அவர் பாராட்டிப் பேசியுள்ளார்.

Related posts