பொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை

இலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 4பெண்கள் உட்பட 545சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவர்களுள் 518பேரே சிறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். எஞ்சிய 27பேருக்கும் வேறு வழக்குகள் உள்ளதால் இவர்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

சிறு சிறு குற்றங்களுக்காகவும் தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களோடு 10வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்த 70வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.

நீர்கொழும்பு, பள்ளஞ்சேனை திறந்த வெளி சிறையிலிருந்து 53கைதிகளும் மஹர சிறையிலிருந்து 46கைதிகளும், அனுராதபுரம் சிறையிலிருந்து 41கைதிகளும், வெலிக்கடை சிறையிலிருந்து 31கைதிகளும், கண்டி, போகம்பர சிறையிலிருந்து 14கைதிகளும் விடுதலையாகின்றனர்.

இதேபோன்று வவுனியா சிறையிலிருந்து 5 கைதிகளும், மட்டக்களப்பு சிறையிலிருந்து 5 கைதிகளும், யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 4 கைதிகளும் விடுதலையாகின்றனர்.

Related posts