உடல் பருமன் பற்றி பேசினால் கடுப்பாகும் வித்யாபாலன்

அனுஷ்கா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் உடல் எடை அதிகரிப்புபற்றி கவலைப்படுவதுடன் எடை குறைப்பு செய்ய கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சில நடிகைகள் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார் கள். இவர்களில் வித்தியாசமானவராக உலாவருகிறார் வித்யாபாலன்.

உடல் எடை கூடியிருந் தாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் படங்களில் நடிக்கிறார். ஆனால் யாராவது அவரிடம் சென்று குண்டாக இருக்கிறீர்களே, எப்போது உடல்மெலிய போகிறீர்கள் என்று கேட்டால் உடனே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுகிறார்.

‘உனக்கு என்ன தெரியும் மூடிகிட்டு போயா’ என அடிக்காத குறையாக விரட்டுகிறார்.உடல்பருமன்பற்றி கேட்டால் கோபப்படுவது ஏன் என்று வித்யாபாலனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது: நான் எல்லோரையும் நேசிக்கிறேன். நடிப்பு எனது தேர்வு. எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன்.

அதன்படியே எதையும் ஏற்கிறேன். உடல்பருமன்பற்றி கேட்பவர் களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும். நானும் சாதாரண பெண்தான்.

பலருக்கும் உள்ளதுபோல் எனக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கிறது. எனவே எனது உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல.

எனக்கும் அது எரிச்சலாகத்தான் இருக்கிறது. நான் குண்டாக இருக்க விரும்பவில்லை. ஆனால் எனது உடல்வாகு அப்படியிருக்கும்போது என்ன செய்வது? உடல் எடை குறைக்க நான் பல்வேறு வழிகளில் முயல்கிறேன். ஆனால் நான் கவலைப்படா மலிருப்பதாக பலர் நினைக்கிறார்கள்.

அதனால்தான் எனக்கு கோபம் வருகிறது. நான் பொது இடங்களுக்கு வருவதை விரும்பவில்லை. அப்படி வந்தால் சிரித்து சிரித்து சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இவ்வாறு வித்யா பாலன் கூறினார். தி டர்ட்டி பிக்சர் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன் முதன்முறையாக தமிழில் அஜீத் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts