இந்தியன் 2 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்துக்கான பணிகளை ரஜினி நடித்த 2.0 படப்பிடிப்பை முடிந்தவுடனே கவனிக்க தொடங்கினார் ஷங்கர்.

வெளிநாட்டிற்கு சென்று தங்கி ஸ்கிரிப்ட் பணியை முடித்தார். பின்னர் அரங்கு நிர்மாணிக்கும் பணி நடந்தது. ஹாலிவுட் மேக் அப் கலைஞர்களை வரவழைத்து கமலுக்கு இந்தியன் தாத்தா கெட்டப் அணிந்து டெஸ்ட் ஷூட் நடத்தினார்.

இதற்கிடையில் கமல் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டார். எல்லா வேலைகளும் முடிந்து கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் நடித்த காட்சிகள் அவருடன் கதாநாயகி காஜல் அகர்வால் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு நாளிலேயே ஷூட்டிங்கை நிறுத்தினார் ஷங்கர்.

படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கு தான் நினைத்ததுபோல் வராததே இதற்கு காரணமாம். இதையடுத்து தயாரிப்பு வடிவமைப்பாளரை அழைத்து அரங்கில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தெரிவித்தார்.

அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திருப்திகரமாக அரங்கு வடிவமைக்கப்பட்டபிறகு படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Related posts