அலைகள் உலகச் செய்திகள் சென்ற வாரத்திற்கானது திங்கள் முதல் வெள்ளி வரை

சென்ற வாரத்திற்கான அலைகள் உலக செய்திகளின் தொகுப்பு.. அலைகள் 04.02.2019 iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jriqqNxHnBU" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>

இனியும் உங்களை தலைவர்களாக ஏற்க தமிழ் மக்கள் தயாராக இல்லை

இனிமேலும் எங்கள் தலைவர்களாக உங்களை தமிழ் மக்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இவ்வாறு நேற்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முன்னிலையில் தெரிவித்தார,; சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய பங்குதந்தை றெக்ஸ் சவுந்தரா அடிகள். மூத்தோரையும் என்ற தலைப்பில் மக்கள் கருத்தறியும் அரசியல் கருத்தரங்கு தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். நான் அரசியல்வாதி அல்ல அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்று பார்ப்பவன். ஒரு பொதுமகனாக ஒரு தமிழ் மகனாக நின்று, இன்றைய எங்கள் நிலைமைகளை பார்க்கும்போது என் உள்ளத்தில் எரியும் ஏமாற்றங்களையும் இங்கு கொட்டி தீர்க்க வந்துள்ளேன். என் வார்த்தைகள் கருத்துக்கள் உங்களை சுடலாம் ஆயினும் இது உள்ளத்தில் இருந்து வரும் வலி. இன்றைய அரசியலில்…

தவறான பாதையிலேயே கூட்டமைப்பு செல்கிறது விக்னேஸ்வரன் பகிரங்க குற்றச்சாட்டு.

"தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கிறது கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்பதே எனது கணிப்பு " இவ்வாறு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்னணியின் கிளிநொச்சி பிராந்திய மாநாடு நேற்று காலை 03.02.2019 வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். " புதிய அரசமைப்பு என்பது ஒரு நாடகம்.. தீர்வு காண முயற்சி என்ற இந்த நாடகத்தின் மூலம் எமது அடிப்படை கோட்பாடுகளை கைவிட செய்வதன் மூலம் தீர்வு இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்கிறது" என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார்.…

உடல் பருமன் பற்றி பேசினால் கடுப்பாகும் வித்யாபாலன்

அனுஷ்கா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் உடல் எடை அதிகரிப்புபற்றி கவலைப்படுவதுடன் எடை குறைப்பு செய்ய கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சில நடிகைகள் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார் கள். இவர்களில் வித்தியாசமானவராக உலாவருகிறார் வித்யாபாலன். உடல் எடை கூடியிருந் தாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் படங்களில் நடிக்கிறார். ஆனால் யாராவது அவரிடம் சென்று குண்டாக இருக்கிறீர்களே, எப்போது உடல்மெலிய போகிறீர்கள் என்று கேட்டால் உடனே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். ‘உனக்கு என்ன தெரியும் மூடிகிட்டு போயா’ என அடிக்காத குறையாக விரட்டுகிறார்.உடல்பருமன்பற்றி கேட்டால் கோபப்படுவது ஏன் என்று வித்யாபாலனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது: நான் எல்லோரையும் நேசிக்கிறேன். நடிப்பு எனது தேர்வு. எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன். அதன்படியே எதையும் ஏற்கிறேன். உடல்பருமன்பற்றி கேட்பவர் களுக்கு என்னைப்பற்றி…

இந்தியன் 2 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்துக்கான பணிகளை ரஜினி நடித்த 2.0 படப்பிடிப்பை முடிந்தவுடனே கவனிக்க தொடங்கினார் ஷங்கர். வெளிநாட்டிற்கு சென்று தங்கி ஸ்கிரிப்ட் பணியை முடித்தார். பின்னர் அரங்கு நிர்மாணிக்கும் பணி நடந்தது. ஹாலிவுட் மேக் அப் கலைஞர்களை வரவழைத்து கமலுக்கு இந்தியன் தாத்தா கெட்டப் அணிந்து டெஸ்ட் ஷூட் நடத்தினார். இதற்கிடையில் கமல் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டார். எல்லா வேலைகளும் முடிந்து கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் நடித்த காட்சிகள் அவருடன் கதாநாயகி காஜல் அகர்வால் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு நாளிலேயே ஷூட்டிங்கை நிறுத்தினார் ஷங்கர். படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கு தான் நினைத்ததுபோல் வராததே இதற்கு காரணமாம். இதையடுத்து…

ஜனாதிபதி, பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த இலங்கை, சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்து வந்த இனத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூருகிறோம். ஆயினும் பெற்ற அந்த சுதந்திரத்தை உயரிய அர்த்தத்தினை அடைவதற்கான புதிய நோக்குடன் புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத்தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ------------ பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி ´சுதந்திரம்´ மிகவும் அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமாயின் ஒரு நாட்டில்´ மக்கள் சமூகமொன்றில் மனிதனைப் போன்றே பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் என அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள…

பொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை

இலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 4பெண்கள் உட்பட 545சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இவர்களுள் 518பேரே சிறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். எஞ்சிய 27பேருக்கும் வேறு வழக்குகள் உள்ளதால் இவர்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படவுள்ளனர். சிறு சிறு குற்றங்களுக்காகவும் தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களோடு 10வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்த 70வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர். நீர்கொழும்பு, பள்ளஞ்சேனை திறந்த வெளி சிறையிலிருந்து 53கைதிகளும் மஹர சிறையிலிருந்து 46கைதிகளும், அனுராதபுரம் சிறையிலிருந்து 41கைதிகளும், வெலிக்கடை சிறையிலிருந்து 31கைதிகளும், கண்டி, போகம்பர சிறையிலிருந்து 14கைதிகளும் விடுதலையாகின்றனர். இதேபோன்று வவுனியா சிறையிலிருந்து 5 கைதிகளும், மட்டக்களப்பு சிறையிலிருந்து 5 கைதிகளும், யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 4 கைதிகளும் விடுதலையாகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் 27ம் தேதியும் இதர நாடுகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது. இரண்டாம் தவணைக்காலத்தின் அரசவை நிறைவுகண்டிருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது கடந்து வந்த பாதை அதன் செயல்முனைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கடந்த அரசவை அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விரிவான உரையொன்றினை ஆற்றியிருந்தார். அவ்வுரையில் குறிப்பாக நாடுகடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக பொருளியல் அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் வழிமுறையாகவும் நாடுகடந்த அரசியலும் நாடுகடந்த தேசியமும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும் பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்ற கோட்பாட்டினையும் கையில் எடுத்து நமது நாடுகடந்த வாழ்க்கையின் தர்க்கரீதியான…

மரண அறிவித்தல் அமரர் நவரட்ணம் சண்முகராசா (பாபு )

யாழ்/அரியாலையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும் இந்தியா (திருச்சி)யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சண்முகராசா (பாபு) 01.02.2019 (வெள்ளிக்கிழமை) இறைபதமெய்தினார். அன்னார் காலஞ்சென்ற சரோஜினிதேவி (அம்மன்)அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நவரெட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்.. காலஞ்சென்ற இளையதம்பி பூரணலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், யமுனா, காஞ்சனா, குகதாஸ், குமாரதாஸ், செந்தில்க்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சந்திரலிங்கம், துரைசிங்கம், சத்தியா, ரதி, பூங்கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்.. காலஞ்சென்ற குணபாலசிங்கம், குகமுர்த்தி. காலஞ்சென்ற நல்லநாயகி, காலஞ்சென்ற விமலாதேவி, தயாநிதி(மணி) தவபாலன், காலஞ்சென்ற சிவபாலன், சிறி. கௌரிகலா. லீலா ஆகியோரின் அன்புச்சகோதரரும்.. காயத்திரி. கார்த்திகா, கிருத்திகா, காருண்யன், பவ்யா, தரணிகா, தமயந்தி, கரிகாலன், சாதுர்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார். அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்..: தகவல் பிள்ளைகள் : தொடர்புகளுக்கு : யமுனா (இந்தியா)…

சிறீலங்கா சுதந்திரதினம் ஒரு கறுப்பு நாளே டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

Denmark 04.02.2019 சிறிலங்காவின் சுதந்திர நாள் ஈழத்தமிழரின் கருப்பு நாள் இன்று சிறிலங்காவின் 71ஆவது (04.02.1948) சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள். சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் வாழ்வில் அந் நாள் கரி நாளாகவே இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது. தமிழருடைய தாயகத்தினை தங்களது காலனித்துவ ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் இருவரும் எங்களது பண்பாட்டு விழுமியங்கள் மீது போர் தொடுத்ததோடு தங்களது பொருளாதார நலன்களையும் காத்துக்கொண்டனர். ஆனால் இறுதியாக வந்த ஆங்கிலேயர் எமது ஆழமான அரசியல் கட்டமைப்பினை சிதைத்து தங்களது பொருளாதார தேவைகளுக்காகவும், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் சிங்களம், தமிழ் என்ற இரு வேறான தேசிய இனக்குழுமங்களை ஒன்றாக்கி ஆட்சி நிர்வாகம் செய்தனர். அதிலிருந்து ஆரம்பித்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படாமல்…