லைக்காவின் பணத்தில் சுந்தர்சி சிம்பு கூத்தாட்டமா..?

வந்தால் ரா{ஜாவாத்தான் வருவேன் என்ற சுந்தர்சியின் சிலம்பரசன் நடித்த வந்தால் ராஜாவாத்தான் வருவேன் என்ற பொன் குஞ்சு படத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

படத்தை பார்த்ததும் எண்ணும் எண்ணங்கள் இப்படியுள்ளன..

சுந்தர்சிக்கு சரக்கு தீர்ந்துவிட்டதென்பதை இந்தப்படமும் மீண்டும் ஒரு தடவை உறுதி செய்துள்ளது.

சிம்பு நடிப்பதானால் உயரம் குறைந்த அவர் உடம்பை குறைக்க வேண்டும். அதைவிட்டு தொப்பையை குறைக்காமல் உள்ளவனை எல்லாம் அடித்துப் போடுவது சரியல்ல.. கன்றாவியாக இருக்கிறது.

படத்தில் கோடீஸ்வரரான நாசரின் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்ற காட்சிகள் வருகின்றன. அதைப் பார்த்தால் படக்குழுவினர் லைக்கா நிறுவனம் பணத்தை அச்சடிப்பதாக நினைத்து வேலை செய்திருப்பது தெரிகிறது.

அவர்களுக்கு வெளி நாட்டு பணம் பற்றி ஒன்றுமே புரியவில்லை வெறும் பாமரர்கள் என்பதை படம் முழுவதும் காண முடிகிறது.

ஒரு குக்கிராமத்து கதையை சர்வதேச படம் போல காட்ட முற்பட்டது அடிப்படைத் தவறு. பணத்தை முதலிட ஒரு நிறுவனம் தயார் என்றால் இப்படி பைத்தியக்கார வேலை செய்யக் கூடாது.

லைக்கா நிறுவனம் இது போன்ற கத்துக்குட்டிகளிடம் போய் படம் எடுக்க பணம் கொடுத்தால் காணாமல் போக அதிக நாட்கள் எடுக்காது என்ற கவலையை படம் தருகிறது.

இதற்குள் சுந்தர்சியும் பிரபுவும் சேருமளவுக்கு லைக்கா பணம் விளையாடியுள்ளது, இல்லை லைக்காவின் பணத்தை நாசமாக்கியிருக்கிறார்கள்.

எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் தொடர் நாடகங்களில் ஆட்களை கன்னத்தில் அடிப்பது போல அடிப்பது, உலகம் தெரியாத, பரந்த அறிவை வளர்க்காத அவலம் தெரிகிறது.

மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலினின் பணத்தில் கமல், மாதவன், த்ரிஷா, ரவிக்குமார் உல்லாசக்கப்பலில் மன்மதன் அம்பு படமெடுத்து கூத்தாடியது போலவே இதுவும் இருந்தது.

மிஸ்டர் லைக்கா இனியாவது இது போன்ற சரக்கு தீர்ந்த கூட்டத்திடம் பணத்தை கொடுக்காதீர்..

உங்கள் பணம் 2.0 விலும் இந்தப் படத்திலும் ஆற்றில் கரைத்த புளியாகியிருக்கிறது என்பதுதான் உண்மை.

எங்கேயோ இடிக்கிறது..

ராஜாவா வருவாரென்று போனால் கோமாளியாக வந்திருக்கிறார் சிம்பு என்பதே கவலை.

அலைகள் 02.02.2019

Related posts