சௌந்தர்யா திருமண வரவேற்பு; போலீஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. இதற்காக போலீஸிடம் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.

சௌந்தர்யா தொழிலதிபர் பிரவீன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் சௌந்தர்யா திரைப்பட த்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் அவரது மறுமணத்துக்கு குடும்பத்தினர் சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் திருமணம் செய்ய உத்தேசித்து வரும் பிப்.11 அன்று திருமணம் நடக்க உள்ளது.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் இந்தியா முழுதுமிருந்து அரசியல், திரையுலக விவிஐபிக்கள், விஐஅபிக்கள் ரஜினியின் உறவினர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

திருமணத்திற்கு முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பும், 12-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் முக்கிய பிரமுகர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் போயஸ் தோட்டம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு வேண்டி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை போலீஸில் மனு அளித்துள்ளார். அதில் 10-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு 12-ம் தேதி திருமண வரவேற்பிலும் முக்கிய திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதால், அவர்களைக்காண ரசிகர்கள் திரளுவர், அந்த சமயங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும்.

இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்தினால் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts