அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை

01. உங்களுக்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும், இல்லையேல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இதோ சில உதாரணங்கள் :

அ. கொலம்பஸ்சிற்கு திட்டம் இருந்ததால்தான் அவர் கப்பல் இலக்கை தொட்டது.
ஆ. அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் இலிங்கனுக்கு திட்டம் இருந்ததாலேயே அவரால் சாதிக்க முடிந்தது.
அ. பதவியேற்றபோது ருஸ்வெல்ரிற்கு பனாமா கால்வாயை கட்ட வேண்டிய திட்டம் இருந்தால் அவரால் அதை நிறைவேற்ற முடிந்தது.
இ. மலிவு விலையில் சிறந்த கார் தரவேண்டும் என்ற திட்மிருந்தமையால் ஹென்றி போர்ட்டால் அதை செய்ய முடிந்தது.
ஈ. தேவை இருந்தமையால் பர்பாங்க் 1871ம் ஆண்டு உருளைக்கிழங்கை உருவாக்க முடிந்தது.

02. மறுபிறவி இருக்கிறதா என்று யோசிப்பதைவிட, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைப் பற்றியும், உலக மக்களின் தற்போதைய வாழ்வைப்பற்றியும்தான் அதிகம் சிந்திக்க வேண்டும்.

03. உலகில் பிறந்துவிட்டீர்களா.. உங்களுக்கு ஏதோ ஒரு நல்ல நோக்கம் இருக்க வேண்டும். அந்த வாழ்வை நல்லபடியாக நடத்தினாலே போதும்.

04. தனக்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரிந்த மனிதனுக்கு வாய்ப்பு, முதலீடு, மற்றவர்களின் ஒத்துழைப்பு போன்ற வெற்றிக்கு வேண்டிய உதவிகள் வந்து சேரும்.

05. திட்டமிட்ட குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக உங்கள் மனதை உயிர்த்துடிப்புள்ளதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

06. அப்படி உருவாக்கினால் உங்கள் மனம் காந்தமாகும். உங்கள் குறிக்கோளுடன் சம்மந்தப்பட்டவைகளை அது தன் பக்கம் காந்தமாக இழுத்துவிடும்.

07. அமெரிக்கரான ஜேம்ஸ். ஜே. ஹில்லிடம் பணம் இருக்கவில்லை, ஆனால் அமெரிக்காவின் பாலைவன பகுதியை ஊடறுக்கும் ரயில்வே தண்டவாளத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்கான உதவிகளை பெற்றார். அமெரிக்காவிலேயே பெரிய ரயில்பாதை நிறுவனமான கிரேட் நொர்தேன் ரயில்வே கம்பெனியையே ஆரம்பித்தார்.

08. உலகிலேயே மிகப்பெரிய பத்திரிகையை நடத்த வேண்டுமென்ற சைரஸ் எச்.கே.கர்டிஸ் சார்ட்டடே நினைத்தார். ஈவினிங் போஸ்ட்டை ஆரம்பித்து வெற்றியும் பெற்றார். கேலி செய்தவர்கள் எல்லாம் வெட்கி நின்றார்கள்.

09. வக்கீலான எம். டபிள்யூ லிட்லெட்டன் 12 வயது வரை பாடசாலையே போகவில்லை. ஒரு நாள் நீதிமன்றம் போன அவர் ஒரு வழக்குரைஞரை பார்த்தார். அவரைப்போலவே தானும் ஆகப்போவதாகக் கூறி படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவிலேயே ஒரு வழக்கிற்கு அதிக பணம் வாங்கும் வக்கீலாக உயர்ந்தார். அன்றய கட்டணம் 50.000 டாலர்கள். அறியாமை நிறைந்த மலைவாசி இளைஞரான அவர் இலக்கு இருந்த காரணத்தால் சாதித்துக் காட்டினார்.

10. மனதளவில் ஒருவர் தன்னை தயார்படுத்தினால் ஆற்றல் நிறைந்த மனிதராக மாறிவிட முடியும்.

11. ஆற்றல் பெருக வேண்டுமானால் உங்கள் இலட்சியம் என்னவென்ற முடிவு இருக்க வேண்டும்.

12. தன்னம்பிக்கையை பயன்படுத்தி முதன்மை குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

13. உங்களுடைய கற்பனைத் திறத்தால் திட்டமிட்ட குறிக்கோளை உருவாக்க வேண்டும்.

14. உங்கள் செயல்களில் ஆர்வத்தை சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால் அவை வேகம் குறைந்துவிடும்.

15. நீங்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். பெற்ற ஊதியத்திற்கும் அதிகமாக உழைக்க பழக வேண்டும்.

16. மனம் கவரும் ஆளுமையை உருவாக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை கிரமமாக கடைப்பிடிக்க வேண்டும்.

17. துல்லியமான சிந்தனையை பெற்று சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றை உண்மை தகவல்களை வைத்து உருவாக்க வேண்டும். செய்திகளை வைத்து உருவாக்கக் கூடாது.

18. சிந்தனையை சிதறவிடாது ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீது மனதை ஒரு நிலைப்படுத்தி உழைக்க வேண்டும்.

19. ஒவ்வொரு முறையும் ஒரு காரியத்தில் மட்டுமே கவனம் வேண்டும், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் கொள்ளான் என்பது பழமொழி.

20. நீங்கள் செய்யும் தவறுகளிலும் மற்றவர் செய்யும் தவறுகளிலும் ஆதாயம் ஏற்படுத்த பழகுங்கள்.

21. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

22. உங்கள் முன்னேற்றத்திற்கான சக்தி உங்களிடம்தான் இருக்கிறது. பயணத்தைத் தொடங்குங்கள் அதன் பின் எத்தனைபேர் உதவ முன்வருகிறார்கள் என்று பாருங்கள்.

23. நீங்கள் இந்த உலகிற்கு வரும்போதே சில சிறப்பான குணங்களுடன்தான் பிறந்துள்ளீர்கள். உங்களுடைய பல்லாயிரம் சந்ததியினரின் பரிணாம வளர்ச்சியால்தான் உருவாகியிருக்கிறீர்கள்.

24. இவை தவிர வேறுபல குணாதிசயங்களும் வாழ்ந்த சூழ்நிலை காரணமாக கிடைத்துள்ளன. இவை எல்லாம் சேர்ந்துதான் உங்கள் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன.

25. திட்டமிட்ட செயல் எப்போது நிஜமாகிறது தெரியுமா அதை நீங்கள் நிறைவேற்ற முடியும் என்று நம்பும்போதுதான்.

அலைகள் பழமொழிகள் தொடர்ந்து வரும். 02.02.2019

Related posts