வல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கடற்படை புலனாய்வு தகவலின் படி யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து 18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை (02) கைது செய்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா பொதி விற்பனைக்காக துவிச்சக்கர வண்டியில் கொன்டு செல்லும் நிலையில் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நாகர் கோயில் பகுதிகளில் வசிக்கின்ற 38 மற்றும் 27 வயதானவர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதி மற்றம் சந்தேகநபர்கள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதே போன்று கடந்த ஜனவரி மாதத்திற்குள் கடற்படையினரினால் 527 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாட்டில் போதை பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை நிலையான கவனத்தை செலுத்துகிறது

Related posts