உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 04

தேவ அன்பு இத்தனை அன்பா?
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதனாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1யோவான் 3:1

எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் பழகும் ஒரு பெண்ணிடம், இந்த நற்குணம் உனக்குள் எப்படி வந்தது என்று கேட்டபோது, அப்பெண் யுத்தத்தால் தனது பெற்றோரை இழந்து அநாதையான என்னை ஒரு பெரியவர் கண்டு, தமது பிள்ளையாக வளர்த்து வந்தார். அநாதையான என்னில் அவர்கள் பாராட்டிய அன்புக்கு, அன்பு நிறைந்த என் வாழ்க்கையைத் தவிர வேறெதையும் நன்றிக்கடனாக செலுத்த முடியாது என்று நினைகிறேன், என்றாள் அவள். (24. 01. 2019 வியாளன் டென்மார்க் ரிவி 2 தொலைக்காட்சியில் பார்த்த எத்தியோப்பிய சிறுமியின் தாயின் அன்பை நினைக்கவும்)

ஒருசில வருடங்களுக்கு முன்னர் கணவனை இழந்து தனிமையில் மிகத் துயரத்துடன் வாழும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர்கள் என்னை யார் என்று தெரியாமல், நான் இன்று அமைதியாக வாழ்வதற்கு அலைகள் பத்திரிகையில் வரும் ”உன்னதத்தின் ஆறுதல் நற்சிந்தனைதான்”காரணம் என்றறார்கள். அப்பொழுது அவர்களுக்கு நான் என்னை அறிமுகம் செய்தேன். அவர்கள், நான் எந்தவொரு ஆணையும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. உங்களை ஏன் அனுமதித்தேன் என்று இப்பொழுது புரிந்த கொண்டேன் எனக்கூறியது எனது மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று ஆண்டவர் தன்னை ஆறுதற்படுத்த ஆசீர்வதிக்க விரும்பினார் என்று கூறிமகிழ்ந்தார்கள்.

இன்றைய சிச்தனையை நன்றாக விளங்கிக்கொள்ள எரேமியாவின் புத்தகம் 1, 2ம் அதி. வாசிக்கவும். யூதா மனந்திரும்பமாட்டார்கள் தேவன் அறிந்திருந்தும், பாபிலோனில் 70 வருட சிறையிருப்பு காத்திருந்தும், கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசி என்ற வாலிபனை அழைத்து, மனந்திரும்புதலின் செய்தியுடன் அவர்களிடம் அனுப்பினார். எரேமியாவுக்கோ தோல்வி. வெளியே சொல்லமுடியாத துயரம். ஒருவரும் கர்த்தருக்குச் செவிகொடுக்கவில்லை.

இப்படிநடக்கும் என்று அறிந்திருந்தும் கர்த்தர் எரேமியாவை அனுப்பினார். ஏன்? தேவன் அவர்களை இன்னும் நேசிப்பதால் அல்லவா! இயேசுவிற்கு செவிகொடுக்க மாட்டார்கள், ஓசான்னா ஓசான்னா என்று ஆர்ப்பரித்தாலும், அவர்களே அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுப்பார்கள், சீசர்கள் அவரை விட்டு ஓடுவார்கள், மொத்தத்தில் இயேசு வெறுக்கப்படுவார் என்று தெரிந்தும் அவரையே பாவத்தின் பரிகாரபலியாக ஒப்புக்கொடுக்க பிதாவாகிய தேவன் முன்வந்தாரே, ஏன்? மனிதர்கள்மேல் கொண்ட அன்பினால் அல்லவா!

பிலாத்துவின் முன்னே இயேசுவுக்கு விரோதமாகக் குற்றம்சுமத்த யூதர் அன்றி யார் நின்றார்கள? இவர்களுக்காகவா என்குமாரனாகிய இயேசுவை பலியாககொடுக்க வேண்டும் என்று இயேசுவை பரத்துக்கு எடுத்தச்செல்ல பிதாவாகிய தேவன் தவறியது ஏன்? தேவன் மனிதனை நேசித்ததால் அல்லவா!

அன்பான தேவபிள்ளைகளே, தேவ அன்பை எப்படி நீ எடைபோட்டாய்? சகல முடிவையும் அறிந்திருந்தம், எப்படியாவது என்பிள்ளைகள் மீட்கப்பட வேண்டும் என்ற ஒரேநோக்கத்தைத் தவிர வேறுநினைவற்ற பிதாவின் அன்பின் மகத்துவத்தை நீ எப்படி உணர்ந்திருக்கிறாய்? சகல வெறுப்புக்கள் மத்தியிலும் எலியாத் தீர்க்கதரிசி 40 ஆண்டுகள் தேவனுக்கு சேவை செய்தார். (2 இராஜாக்கள்) இயேசுவும் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். இந்த அன்புக்குத்தான் நீங்களும் நானும் சாட்சிகள். பாவத்தோடு நாம் அழிந்து போகாமல் நம்மை ஏற்றுக்கொண்டு, தமது பிள்ளைகளாக எம்மை ஏற்றுக்கொண்ட தேவனுக்கு நாம் காட்டும் அன்பு எங்கே?

அந்த அன்பை வெளிக்காட்டி வாழ்வதைத்தவிர வேறென்ன இந்த உலகத்தில் எமக்கு உள்ளது? நாம் எப்படி வாழ்கிறோம்? சற்று இதனை சிந்திப்போம். பிள்ளைகள் என்று சொல்வத் தகுதியற்ற எம்மை தமது பிள்ளை என்று சொன்ன தேவ அன்புக்கு சாட்சியாக வாழ்கிறோமா? அல்லது அந்த அன்பு தூசிக்கப்பட இடமளிக்கிறோமா?

அன்பு நிறைந்த நல்லபிதாவே, நீர் அன்புள்ளவர் என்பதையறிந்தும், அதை உணராத பாவியாக பலவருடங்கள் வாழ்ந்து வந்துள்ளேன். இன்று இந்த மாபெரும் உண்மை யை உணரவும் அறியவும் எனக்கு உதவியதற்காக நன்றி அப்பா. நீர் என்னில் காட்டிய அந்த மட்டற்ற அன்புக்கு சாட்சியாக நான் வாழ, எப்படியாவது நீர் என்னை, உமது அன்பை உணர்ந்து கொள்ளும்படியாக உமது ஆவியினால் என்னை நிரப்பிகாத்து வழிநடத்தும்படியாக இயேசுவின் நாமத்தினால் வேண்டிநிற்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts